டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் வழக்கு: 7 தமிழர் விடுதலை குறித்து முடிவு எடுக்காத தமிழக ஆளுநர்-உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காத தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் பரிந்துரை மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Recommended Video

    7 தமிழர் விடுதலை வழக்கு - விடுதலை ராஜேந்திரன் கருத்து - வீடியோ

    ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என மாநில அரசுக்கான அதிகாரம் - அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை 2018-ல் தீர்மானம் நிறைவேற்றியது. இது ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.

    ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர் ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்

    உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன்

    உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன்

    இதனிடையே உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கி தந்ததாக என் மீது குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறேன்; ஆனால் என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆகையால் தமது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் பேரறிவாளன் வலியுறுத்தி இருந்தார்.

    வசமாக சிக்கிய சிபிஐ

    வசமாக சிக்கிய சிபிஐ

    இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முதலில் சிபிஐ தரப்பில் மனுத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஒவ்வொருமுறையும் சிபிஐ தரப்பு ஒரே வாதத்தை முன்வைத்ததால் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. பின்னர் பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக கூடுதலாக எந்த தகவலையும் திரட்ட முடியவில்லை என கூறியது சிபிஐ.

    ஆளுநரின் தாமதம்

    ஆளுநரின் தாமதம்

    இதனையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டிருந்தனர். அப்போது 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது; இந்த முடிவு மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சுட்டிக்காட்டியிருந்தது.

    உச்சநீதிமன்றம் அதிருப்தி

    உச்சநீதிமன்றம் அதிருப்தி

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாகேஸ்வர ராவ், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது மகிழ்ச்சி தரவில்லை என கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    English summary
    SC not happy over Tamilnadu Governor for pending on Seven Tamils Release Recommendation by Tamilnadu Govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X