மோடி மீது விமர்சனம்-பத்திரிகையாளர் வினோத் துவா மீதான பாஜகவின் தேச துரோக வழக்கு ரத்து- உச்சநீதிமன்றம்
டெல்லி: மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேசதுரோக வழக்கை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மூத்த பத்திரிகையாளரான வினோத் துவா கடந்த ஆண்டு, யூ டியூப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பிரதமர் மோடி குறித்து விமர்சனங்களை வினோத் துவே முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மரணங்களை வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதாக வினோத் துவா அவதூறாக பேசியுள்ளார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இமாச்சல பிரதேசத்தின் பாஜக பிரமுகர் அஜய் ஷ்யாம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதனடிப்படையில் வினோத் துவா மீது இமாச்சல பிரதேச போலீசார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வினோத் துவா மனுத் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் வினோத் துவாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வினோத் துவா மீதான தேசதுரோக வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.
கேதார்நாத்சிங் வழக்கு தீர்ப்பின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு
மேலும் அரசுகள் மீதான விமர்சனங்களே தேசவிரோத குற்றங்கள் ஆகாது என்ற கேதார்நாத்சிங் வழக்கின் தீர்ப்பு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 1962-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கேதார் நாத்சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பில், தேசத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலான விமர்சனங்கள், வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவைதான் தேசதுரோக சட்டத்தின் கீழ் வரும். அப்படி எதுவும் இல்லாதவை தேசதுரோக சட்டத்தின் கீழ் வராது என குறிப்பிட்டிருந்தது.
இதனைத்தான் இன்று வினோத் துவா வழக்கிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் உச்சநீதிமன்றத்தில் வினோத் துவா முன்வைத்த மற்றொரு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் பல மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்பது வினோத் துவா கோரிக்கை. இதனை மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications