டெல்லி திகார் சிறையில் 100-வது நாளாக ப.சிதம்பரம்- ஜாமீன் மனு மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்களாகி உள்ளது. இந்நிலையில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய நிதி முதலீட்டை அனுமதித்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றது என சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்னரே சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி திகார் சிறையிலேயே ப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் சிதம்பரம் சிறையில் இருந்து விடுதலையாக முடியவில்லை.
இந்நிலையில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். ஆனால் அமலாக்கப் பிரிவு தரப்பில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போதும் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் தர அமலாக்கப் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் சிதம்பரத்தை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் எனவும் அமலாக்கப் பிரிவு தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications