ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்...சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 3-வது நீதிபதி விசாரிக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த வழக்கில் 3-வது நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கே.டி.ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ7 கோடி சொத்து குவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது தேவையற்றது. செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது; மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை எனக் கூறி மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்தார்.
இரண்டு நீதிபதிகள் முரண்பாடான தீர்ப்பு அளித்ததையடுத்து 3-வது நீதிபதியாக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். ஆனால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
இவ்வழக்கில், 3-வது நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். அதே நேரத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் 3-வது நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!











Click it and Unblock the Notifications