வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் வாக்கு? தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு தொடர்பாக பதிலளிக்குமாறு, யுஜிசி மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொந்த ஊர்களில் வாக்கு இருக்கும் இளம் வாக்காளர்கள் பலரும் வெளியூர்களில் படிப்பதால், தேர்தல் நேரத்தில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை 100 விழுக்காடு கொண்டு வர வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. வாக்களிப்பதன் அவசியத்தையும் வாக்களிக்க வேண்டிய கடமை பற்றியும் விழிப்புணர்வு பிரசாரஙகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள்
அதேநேரத்தில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியாவில், மக்கள் கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிக்கிறார்கள். இவர்களில் 18 வயது நிரம்பியர்களுக்கு அவர்கள் பிறந்த சொந்த ஊரில் வாக்குகள் உள்ளன.
ஆனாலும் தேர்தல் நேரத்தில் வெளியூர்களில் இருப்பதால், வாக்குசெலுத்துவதற்காக பலரும் வருவது இல்லை. இதுவே வாக்கு சதவீதம் சரிவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில்தான் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியகள் மற்றும், வயது முதிர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் தபால் ஓட்டு வசதியை வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் அளிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
தபால் வாக்குப்பதிவு வசதி
அந்த மனுவில், தங்கள் சொந்த தொகுதிகளுக்கு வெளியே உள்ள மானவர்கள் வாக்கு செலுத்த ஏதுவாக பயனுள்ள வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். தற்போது உள்ள அமைப்பில் ஜனநாயக கடமையை பெரிய அளவிலான மாணவர்களால் பயன்படுத்த முடியவில்லை.
எனவே, தங்கள் சொந்தத் தொகுதிகளுக்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ வாக்காளர்களுக்கு, தபால் வாக்குப்பதிவு வசதியை நீட்டிக்க வேண்டும். மாணவர்கள், வாக்குப்பதிவு நாளில் தங்கள் சொந்தத் தொகுதிகளுக்கு செல்வதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. வாக்குப்பதிவு நாளில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு
அப்போதுதான் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வது என்றாலும் கூட வாக்கு செலுத்திவிட்டு வர முடியும்" என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனு விசாரணை நடைபெற்றது.
அப்போது மனுதாரர் தரப்பில் வைத்த வாதத்தில், "தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு கூட தபால் வாக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்று கூறிட்டார். இதையடுத்து வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்ய முடியுமா? என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒத்திவைத்தனர்.
5 மாநில தேர்தல்கள்
விரைவில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்கள் 1.84 கோடி பேரும், 20 வயது 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19.74 கோடி பேரும் உள்ளனர். இவர்களில் பலரும் கல்லூரி படிப்பு முதல் முனைவர் படிப்பு வரை படிப்பவர்கள் ஆவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications