மம்தா அரசை சாடும் நீதிபதி அபிஜித் விவகாரம்.. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை
டெல்லி: கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாயா மேற்கு வங்க மாநில அரசின் ஆசிரியர் நியமன ஊழல் குறித்து பேட்டி கொடுத்தது சர்ச்சையானது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற ஜெனரல் செயலாளரிடம் பேட்டி தொடர்பான மொழிமாற்ற பதிவை இன்றைக்குள் கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் அங்கு ஆசிரியர் நியமனத்தில் பெரியளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை கொல்கத்தா நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா விசாரித்து வந்தார். வழக்கு விசாரணையின்போது மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசை கடுமையாக சாடினார். இதனால் ஆசிரியர் நியமன ஊழல் விஷயம் பெரிய அளவில் பேசும் பொருளானது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா பிறப்பித்தார். தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் தான் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார்.
அப்போது அவர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு விசாரணையை பற்றி விபரங்களை தெரிவித்தார். மேலும் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜியையும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் அபிஜித் கங்கோபாத்யாயா இப்படி செய்தது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து அபிசேக் பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்தாசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடுமையாக சாடியது. அப்போது "நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேட்டி கொடுப்பது நீதிபதியின் வேலையில்லை" என காட்டமாக தெரிவித்தது.
மேலும் பணி நியமன ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா பேட்டி அளித்தது தொடர்பான ஆவணங்கள், மொழிமாற்றங்களை கொல்கத்தா உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே தான் பேட்டி தொடர்பான அதிகாரப்பூர்வ மொழி மாற்றத்தை இன்று இரவுக்குள் சமர்ப்பிக்கும்படி உச்சநீதிமன்ற ஜெனரல் செயலாளருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுபற்றி அறிந்த உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவசரமாக இன்று விசாரித்தது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தபோது மொழிமாற்றம் தொடர்பான விபரங்களை கொல்கத்த நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டதற்கு தடை விதித்தது.












Click it and Unblock the Notifications