அயோத்தி வழக்கு விசாரணை- அனைத்து வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை அக்டோபர் 18-ந் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய இந்நிலத்தை நிர்மோஹி அகாடா, ராம் லால்லா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது அத்தீர்ப்பு.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.
ஆனால் மத்தியஸ்த குழுவானது பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என தெரிவித்துவிட்டது. இதனால் இவ்வழக்கின் விசாரணயானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் இவ்வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கில் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை அக்டோபர் 18-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் தேவைப்பட்டால் சனிக்கிழமை கூட நீதிமன்ற விசாரணை நடைபெறும் என்றும் மத்தியஸ்த குழுவும் தங்களது முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கிறார். அதற்குள் இவ்வழக்கில் அவர் தீர்ப்பளிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications