எஸ்ஐஆர் தொடர்பான வழக்கில்.. ஜனவரியில் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும்! உச்சநீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இம்மாதம் வாதங்களை முடித்து ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார்.
அதேபோல இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் 17 ஆம் தேதி விசாரணை நடைபெறும் நிலையில் புதிதாக எந்த வழக்குகளும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தலைமை நீதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எஸ்ஐஆர் நடவடிக்கையை பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் வரவேற்கின்றன. ஆனால் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என இந்திய கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எஸ்ஐஆர் என்பது, ஏற்கெனவே உள்ள தேர்தல் படிவங்களை கணக்கில் கொள்ளாமல் புதியதாக படிவத்தை உருவாக்குவதாகும். கடந்த மாதம் பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டது. எஸ்ஐஆர் நடவடிக்கையால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டிருக்கிறார்கள் என்று புகார்கள் எழுந்தன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பூர்வாஞ்சல் பகுதியில், குடியுரிமைக்கு ஆதாரமாக ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள தேர்தல் அதிகாரிகள் மறுத்ததாக புகார் எழுந்தது.
ஆனால், பாட்னா போன்ற நகரங்களில் இந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்படியெனில் இஸ்லாமிய வேட்பாளர்கள் வேண்டுமென்றே விடுவிக்கப்படுகிறார்களா? என்றும் கேள்வி எழுந்தது. ஆனால் பாஜகவும், தேர்தல் ஆணையமும் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை போல, தமிழ்நாட்டிலும் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. எதிர்ப்பு தெரிவித்ததோடு நிற்காமல், உச்சநீதிமன்றத்திலும் இதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக மட்டுமல்லாது எஸ்ஐஆர் நடக்கும் மாநிலங்களில் செயல்படும் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவையும் இதற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த வழக்கு நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications