எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு மீது விரைவில் விசாரணை- உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீதான ரூ4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்தது. அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு முதல்வரின் உறவினர் ராமலிங்கத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச் சாலையை விரிவுபடுத்தி பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கும் ரூ200 கோடி மதிப்பிலான மதுரை ரிங் ரோடு பணி ஒப்பந்தம் சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற ரூ.200 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ என்ற நிறுவனத்துக்கும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத் துறைகோட்டங்களின் கீழ் வரும் சாலைகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருக்கிறது என கூறியிருந்தார்.
ஆர்.எஸ்.பாரதியின் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு இப்போதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Recommended Video
இந்நிலையில் ரூ4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு தொடர்பான இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்; இவ்வழக்கு விசாரிக்கப்படாமல் இருப்பதால் விசாரணைகளும் முடங்கி உள்ளதாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஏற்று உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிவித்தது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications