டாஸ்மாக் திறக்கப்படுமா? தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: டாஸ்மாக்கை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கை நாளை காலை 11 மணிக்கு விசாரணை எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது/
Recommended Video
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக்கடைகளை தமிழக அரசு கடந்த மே 7ம் தேதி திறந்தது.
பல நாட்களுக்கு திறக்கப்பட்டதால் பல கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். இரண்டு நாளில் மட்டும் சுமார் 250 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குடிமகன்கள் கூட்டம்
குடிமகன்களின் கூட்டத்தால் பல இடங்களில் சமுக இடைவெளி கேள்விக்குறியானது. அத்துடன் குற்றங்களும் தமிழகத்தில் டாஸ்மாக் திறந்திருந்த மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அதிகரித்து இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆதாரை கட்டாயமாக்க வேண்டும், வாரத்தில் இரண்டு நாள் தான் மதுவாங்க அனுமதி உள்ளிட்ட நிபந்தனை அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் முன்னதாக அனுமதித்து இருந்தது.

ஆன்லைனில் விற்பனை
ஆனால் பல்வேறு தரப்பினர் டாஸ்மாக் திறக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட கூட்டநெரிசலை காரணம் காட்டியும், கொரோனா பரவும் அச்சம் உள்ளதாக சுட்டிக்காட்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை புகைப்படங்களுடன் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்தனர். இதனால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை உடனே மூட மே 8ம் தேதி மாலை உத்தரவிட்டது. அத்துடன் ஆன்லைனில் மட்டுமே விற்க வேண்டும் என்றும் . ஆன்லைனில் மதுவிற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே9ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மேல்முறையீடு
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் என டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது. அத்துடன் கடை பல நாட்களுக்கு பிறேக திறக்கப்பட்டதால் முதல் நாளில் கூட்டம் அதிகமாக இருந்தது என்றும் அடுத்த நாளே கூட்டம் குறைந்துவிட்டதும், சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தெரிவித்தது.

காலை 11 மணிக்கு விசாரணை
இந்த மனுவில் பிழை இருந்ததால் அதை சரி செய்ய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இது சரி செய்யப்பட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை காலை 11 மணிக்கு விசாரிப்பதாக அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர் ராவ், சஞ்சய் கிஷான் கௌல், பூஷண் ராமகிருஷ்ண கவாய் ஆகியே மூன்று பேர் அமர்வு விசாரிக்க உள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications