பீகார் தேர்தல்; ஆதார் அட்டையை அடையாளமாக ஏற்ற வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஆதார் அட்டையை, அடையாள அட்டையாக ஏற்க மறுத்தது. இந்நிலையில், ஆதாரையும் ஏற்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை (SIR) மேற்கொண்டிருக்கிறது. SIR என்பது, வாக்காளர் பட்டியல்களை மிகவும் துல்லியமாகவும், பிழைகள் இல்லாமலும், புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளும் ஒரு விரிவான செயல்முறையாகும்.

Supreme Court Bihar Aadhaar

இந்த செயல்முறையில் போலி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படுவார்கள். பீகாரில் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் இந்த செயல்முறையின்போது அடையாளத்திற்கு ஆதார் அட்டையை காட்டினால் போதும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதியில் ஆதார் அட்டை போதாது என்ற கூறி வேறு புதிய ஆவணங்களை காட்ட கட்டாயப்பட்டுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் "சிறப்பு தீவிர திருத்தத்திற்கு" ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றையும் பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

குடியுரிமையைக் காட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருந்தது. இந்த லிஸ்ட்டில் ஆதார் அட்டை இல்லை. ஆனால் பாட்னா போன்ற நகரங்கில் மட்டும் ஏன் ஆதார் அட்டையை மட்டும் ஓகே என்று அதிகாரிகள் சொல்கிறார்கள் என்று கேள்வி எழுந்தது. மட்டுமல்லாது தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணையில் நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பீகாரை பொறுத்தவரை மிககுறைவான அளவு மக்கள் மட்டுமே ஆவணங்களை சரியாக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக வங்கதேசத்தை ஒட்டியுள்ள 'சீமாஞ்சல்' பகுதிகளில் ஆவணங்களை வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக குறைவு.

'சீமாஞ்சல்' என்பது பூர்ணியா, கட்டிஹார், அராரியா, கிஷன்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளை இது உள்ளடக்கி இருக்கிறது. இந்த பகுதிகள் மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்துடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. சாலை வசதி, போக்குவரத்து, சுகாதார வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை இங்கு அதிகம்.

இந்த பகுதியில் வாழும் மக்களிடம்தான் தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையை தவிர வேறு ஆவணங்களை கேட்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+