டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுக்க மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மால்கள் மூடப்படும்.. மத்திய அரசு அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: மார்ச் 31ம் தேதி வரை நாடு முழுக்க உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும், ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended Video

    'கொரோனா... இன்று!' 'ஒன் இந்தியா' டெய்லி ஸ்பெஷல் அப்டேட்!

    இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி மொத்தம் 114 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 13 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இரண்டு முதியவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்.

    Schools, collages leave in Indian including Tamilnadu

    அவர் கூறுகையில், பள்ளிகள், கல்லூரிகள், நீச்சல் குளங்கள், மால்கள் உள்ளிட்ட அதிக மக்கள் கூட கூடிய இடங்களை மார்ச் 31ம் தேதி வரை மூடி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.

    நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மார்ச் 18ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

    கொரோனா: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளை மார்ச் 31 வரை மூட முதல்வர் உத்தரவு!கொரோனா: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளை மார்ச் 31 வரை மூட முதல்வர் உத்தரவு!

    ஈரான் நாட்டிலிருந்து நான்காவது முறையாக இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். நான்காவது பயணத்தின்போது 53 இந்தியர்கள் நாடு திரும்பி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் வந்து சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதேபோல தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 31ஆம் தேதிவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுமுறை அறிவித்துள்ளார். சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. அதேபோல மருத்துவ கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். இவையெல்லாம் அத்தியாவசிய தேவைகள் என்று அரசு கருதுகிறது. மேலும் பொது போக்குவரத்துகளான, பஸ், ரயில் போன்றவற்றை பயன்படுத்துவதை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

    English summary
    Lav Aggarwal, Joint Secretary, Union Health Ministry on #Coronavirus: Important measures including closing of schools, swimming pools, malls, allow employees to work from home,less use of public transport, 1 meter distance between people should be maintained till 31st March.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X