குற்றவியல் நடைமுறை மசோதா! கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற வழிவகை! எஸ்.டி.பி.ஐ. எதிர்ப்பு!
டெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா 2022-க்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த மசோதா ஒப்புதல் வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி பெறுவதற்கு சமமானது என அச்சம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சோசியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

குற்றவியல் நடைமுறை
"குற்றம் அல்லது குற்றத்தின் தன்மையைப் பொருட்படுத்தாமல், குற்றவாளிகளின் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளுடன் பயோமெட்ரிக் தரவுகளை சேகரிக்க காவல்துறைக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. அமலில் இருக்கும் தற்போதைய சட்டங்களில், குறிப்பிட்ட வகை குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்களின் விரல் மற்றும் கால் தடம் பதிவுகளை எடுக்க காவல்துறை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்த சட்டத் திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் 20 மற்றும் 21 வது பிரிவுகளை மீறுவதாக உள்ளது.

ஒப்புதல் வாக்குமூலம்
மேலும், இது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து "ஒப்புதல் வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி" பெறுவதற்கு சமமானதாகும். தனியுரிமை ஒரு அடிப்படை உரிமையாகும். தற்போதைய ஒன்றிய அரசின் மசோதா இந்த தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. மேலும், இந்த மசோதா காவல்துறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது. திருத்தப்பட்ட சட்டமூலத்தை தெரிவுக்குழுவிற்கு அனுப்பும் எதிர்க்கட்சிகளின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளாத பாஜக அரசாங்கத்தின் நிலைப்பாடு, தற்போதைய ஆட்சியின் உண்மையான எதேச்சதிகார முகத்தை அம்பலப்படுத்துகிறது.

உள்துறை அமைச்சர்
"கொடூரமான குற்றங்களின் வழக்குகளில் மட்டுமே விதிகள் பயன்படுத்தப்படும்" என்று உள்துறை அமைச்சரின் விளக்கம் மக்களை முட்டாளாக்குவதற்கான உண்மையை மறைக்க முயலும் ஒரு முயற்சியாகும். தேசவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் சட்டமாக கொண்டு வரப்பட்ட கடுமையான யு.ஏ.பி.ஏ., இப்போது கண்மூடித்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எதிர்க் குரல்களையும் நசுக்குகிறது. தற்போதைய மசோதா, எதிர்ப்பாளர்களைக் குறிவைக்கும் மற்றொரு கொடூரமான சட்டத்தைத் தவிர வேறில்லை.

வரம்புகளை மீறாமல்
ஆகவே, அரசாங்கம் அதன் வரம்புகளை மீறாமல் சட்டங்களை இயற்றவும், மேலும், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் ஷரத்துக்களை பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு அதை உறுதி செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கேட்டுக் கொள்கிறது." இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications