மோடியை சுற்றி வளைக்க "பெண் எம்பி.க்கள்" ரகசிய பிளான்? கடைசி நேரத்தில் தடுத்த சபாநாயகர்? என்னாச்சு?
சென்னை: இந்திய ஜனநாயகத்தின் இதயமாக கருதப்படும் மக்களவை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு அரசியல் போர்க்களமாக மாறியிருக்கிறது... கடந்த சில நாட்களாகவே நாடாளுமன்ற வளாகத்தில் புகைந்து கொண்டிருந்த சில அரசியல் மோதல்கள், இப்போது டெல்லியில் உச்சகட்டப் பதற்றத்தை எட்டியுள்ளன.. என்ன நடந்தது?
இன்று அவையை ஒத்திவைப்பதற்கு முன்பு பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "நேற்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி எப்படிச் சென்றார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள்.

பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. தவறாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதாலேயே பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று சொன்னேன்" என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர்
சபாநாயகரின் இந்த கூற்று தேசத்தை கதிகலங்க வைத்துள்ளது.. வெறும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வழக்கமான வாக்குவாதமாக மட்டுமல்லால், இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே ஒரு கறுப்பு புள்ளியாக மாறக்கூடிய அளவிலான தீவிரத்தன்மை இன்று நடந்துள்ளதைதான் நாம் சற்று கவனித்து பார்க்க வேண்டியிருக்கிறது..
.
இந்த நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்திருப்பது, எதிர்க்கட்சிகளின் நீண்டகால ஆதங்கமும் பிடிவாதமும் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
பிரதமர் மோடி
குறிப்பாக, சில முக்கியமான தேசிய பிரச்சனைகளில் பிரதமர் மோடி நேரடியாக அவையில் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒரு அணியாகத திரண்டு வலியுறுத்தி வருகின்றன...
"பிரதமர் உரையாற்றும் போது மற்றவர்கள் அமைதியாக கேட்க வேண்டும்" என்பது நாடாளுமன்ற மரபாக இருந்தாலும்கூட, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேச முற்படும்போது அவர்களது மைக் அணைக்கப்படுவதாக காங்கிரஸ் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது..
தங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படும்போது, பிரதமரையும் பேச விடமாட்டோம் என்பதுதான் அவர்களின் ஆல்டைம் பிடிவாதமாக உள்ளது..
மனித சங்கிலி
அதேபோல, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது, அவருக்கு ஒரு வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் வகுத்திருந்த திட்டம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி, பிரதமரின் இருக்கையை சுற்றி ஒரு மனிதச் சங்கிலி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அவரை நிலைகுலையச் செய்ய முயற்சி நடந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிரதமர் நுழைந்திருந்தால்?
சபாநாயகர் ஓம் பிர்லாவின் தலையீடு இந்த இடத்தில் மிக முக்கியமானது... சபையின் மாண்பை, கண்ணியத்தை காப்பதையும், ஒரு நேரடி மோதல் அல்லது கைகலப்பு போன்ற அநாகரிகமான சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதையும் முதன்மையான பணியாக கொண்டுள்ளார்..
பிரதமர் ஒருவேளை அவைக்குள் நுழைந்திருந்தால், எதிர்க்கட்சிகளின் இந்த தீவிரமான முற்றுகை முயற்சி ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கக்கூடும். அதனாலேயே பிரதமர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்கிற மற்றொரு வாதமும் அரசியல் அரங்கில் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
இது ஒரு தனிப்பட்ட அரசியல் மோதல் என்பதைத் தாண்டி, ஆட்சியாளர்களின் அதிகார பலத்திற்கும், தங்களின் உரிமைக் குரலை நசுக்கப்படுவதாகக் கருதும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கும் இடையிலான ஒரு பெரிய அரசியல் பிளவாகவே உருவெடுத்துள்ளது.
ஆனால் ஒன்று,
ஜனநாயகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டுமானால், இரு தரப்பும் இணக்கமான சூழலை நோக்கி நகர வேண்டியது அவசியம். ஆனால், தற்போதைய சூழலில் இரு தரப்பும் தத்தமது பிடிவாதங்களில் உறுதியாக இருப்பதால், இந்த அரசியல் போராட்டம் மேலும் தீவிரமடையவே வாய்ப்புள்ளது... என்ன நடக்கபோகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications