ராஜீவ் காந்தி உயிருக்கு ஆபத்து.. படுகொலைக்கு முன் எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை - எக்ஸ்பர்ட் தகவல்
டெல்லி: 1991ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பது தொடர்பான டிரான்ஸ்கிரிப்டுகளை இஸ்ரேல் உளவுத்துறை பகிர்ந்து கொண்டதாகவும், ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அது காணாமல் போனதாகவும் நமித் வர்மா பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ராஜீவ் காந்தி உயிரிழந்தார்.
இந்நிலையில் தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான முக்கியமான விஷயத்தை பாதுகாப்பு நிபுணராக அறியப்படும் நமித் வர்மா கூறியுள்ளார்.

நமித் வர்மா பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை கொள்கையின் பல்வேறு முக்கிய விஷயங்களில் அரசுடன் நெருக்கமாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இந்நிலையில் தான் உசனாஸ் பவுண்டேஷன் சார்பில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியிலான உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் நமித் வர்மா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி கடந்த 1991ல் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சில டிரான்ஸ்கிரிப்ட் தகவல்களை இஸ்ரேல் உளவுத்துறை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது. 30 - 40 ஆண்டுகளாக தகவல்கள் பரிமாறப்பட்டது. ஆனால் 1991ல் ராஜீவ் படுகொலைக்கு பிறகு டிரான்ஸ்கிரிப்டுகள் மாயமாகின.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு மாற்றம் நிகழ தொடங்கியது. அரசியல் மாற்றத்தால் நிலைமை மாறிப்போனது. முன்பு ஒவ்வொரு நாடுகளும் தினமும் மற்ற நாடுகளுக்காகவும் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அமைதியை ஏற்படுத்தும் உளவுத்துறையின் தகவல் பகிர்ந்து தொடர்பான குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது அல்லது ஏதாவது மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். மேலும் டிரான்ஸ்கிரிப்ட்டின் மற்றொரு நகலை நாங்கள் பெற விரும்பினோம். ஆனால் இஸ்ரேல் வழங்கவில்லை.
டிரான்ஸ்கிரிப்ட் தகவலின்படி பணம் செலுத்தப்பட்டுள்ளத. ‛காட்மேன்' சார்பில் பணம் செலுத்தப்பட்டதாக கூறியது. இதை விட வெளிப்படைத்தன்மை என்ன இருக்க முடியும. இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாடுகள் இடையேயும் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்வதில் அரசியல் என்பது பெரும் பங்கு உள்ளது.
டிரான்ஸ்கிரிப்ட்டின் மற்றொரு நகலை கேட்டபோது இஸ்ரேல் அதனை வழங்கவில்லை. ஒவ்வொரு நாடுகள் இடையே உளவுத்துறை தகவல்கள் பகிர்ந்து கொள்வதில் அரசியல் எப்படி விளையாடுகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.
ஏனென்றால் அந்த சமயத்தில் சோவியத் யூனியன் பிளவுப்படவில்லை. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் எதிரெதிராக இருந்தாலும் கூட இருநாடுகளுக்கும் பாலமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இதனால் முக்கியத்துவம் இருந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை மாறியது'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேலை சேர்ந்த ஜோசப் ரோசன் மற்றும் கோபி மைக்கேல் ஆகியோர் பங்கேற்றனர். இவர் இஸ்ரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தில் துணை இயக்குனர் மற்றும் பாலஸ்தீனிய பிரிவின் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications