பிபிசி தமிழோசை மூத்த செய்தியாளர் 'ஆனந்தி அக்கா' காலமானார்- பிரபாகரனின் முதல் பேட்டியை ஒலிபரப்பியவர்!
டெல்லி: ஈழத் தமிழ் ஊடக ஆளுமையான பிபிசி தமிழோசையின் மூத்த செய்தியாளர் 'ஆனந்தி அக்கா' வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை முதன் முதலாக நேர்காணல் செய்து ஒலிபரப்பியவர் என்ற சரித்திரப் பெருமைக்குரியவர் ஆனந்தி அக்கா.
1980, 1990களில் தொலைக்காட்சி, இணைய செய்தி உலகம் அறிமுகமாவதற்கு முன்னர் வானொலிகள் ஊடகத்துறையில் முதன்மை பங்களிப்பு செய்தது. இலங்கையில் சிங்கள அரசுக்கு எதிராக தமிழர்கள் நடத்திய தமிழீழம் எனும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் மற்றும் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் போர் தொடர்பான செய்திகளை உலகத் தமிழருக்கு வழங்கியது பிபிசியின் தமிழோசை வானொலி முதன்மை இடம் வகித்து வந்தது.

பிபிசி தமிழோசையில் ஈழத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் 'ஆனந்தி அக்காவின்' குரலில் வெளிப்படும் போர் செய்திகள், தமிழர் துயரங்கள் பெரும் தாக்கத்தை உலகத் தமிழர்களிடையே ஏற்படுத்தியது. தமிழீழம் எனும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், கொரில்லா யுத்தம் (தலைமறைவு இயக்கம்) நடத்திய காலத்தில் அவரை நேரில் சென்று ஆனந்தி அக்கா நேர்காணல் செய்து பிபிசி மூலம் உலகத்துக்கு ஒலிபரப்பு செய்தது சரித்திரத்தில் முக்கியத்துவமான நிகழ்வு.
இலங்கையில் தமிழீழத்தின் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தி சூரியபிரகாசம் எனும் ஆனந்தி அக்கா, 1970களிலேயே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். 1980களில் பிபிசி தமிழோசை வானொலியில் அறிவிப்பாளராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். கடந்த 2005-ம் ஆண்டு பிபிசி தமிழோசை பணியில் இருந்து ஆனந்தி அக்கா ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஈழம் ஆதரவு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் ஆனந்தி அக்கா.
ஈழத் தமிழ் ஊடக ஆளுமையான ஆனந்தி அக்கா, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார். அவரது மறைவுக்கு ஊடக உலகமும் ஈழத் தமிழ் அரசியல் உலகமும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
சீமான் இரங்கல்
ஆனந்தி அக்கா மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறியுள்ளதாவது: இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒலிப்பரப்பாகும், பிபிசி தமிழோசை வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவிப்பாளராகப் பணியாற்றி, தம்முடைய காந்தக்குரலால் உலகத்தமிழர்களின் உள்ளங்கவர்ந்த அக்கா ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அக்கா ஆனந்தி அவர்கள். பிரபாகரனை இரண்டுமுறை நேர்காணல் செய்யும் வாய்ப்பினை பெற்ற பெருமைக்குரியவர். தம் இனிய குரலால் தமிழ்த்தொண்டாற்றிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அக்கா ஆனந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்ச்சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். அக்கா ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications