ஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்
டெல்லி: ஹிமாச்சல் பிரதேசத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் ஹிமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். கடந்த 2014ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் டியோரியா தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் நியாஸ் அகமதுவை விட சுமார் 2லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

சிறுகுறு தொழில்துறையின் கேபினட் அமைச்சராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி விலகினார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக பதவி விலகிய அவர், கடந்த ஆகஸ்டு 2018 வரை நாட்டின் பாதுகாப்பு நிலைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றினார்.
இந்நிலையில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கல்ராஜ் மிஸ்ரா போட்டியிடவில்லை. இந்த சூழலில் அவரை ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிட மாற்றம் செய்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications