முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்கள்.. டெல்லி கலவரத்திற்கு ஈரான் கடும் கண்டனம்.. பரபரப்பு திருப்பம்!
முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை இந்தியா வளர விட கூடாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் டெல்லி கலவரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை இந்தியா வளர விட கூடாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் டெல்லி கலவரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி கலவரம் நடந்து முடிந்து 4 நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை. டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கலவரத்தில் காயம் அடைந்த பலர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

என்ன
இந்த நிலையில் டெல்லி கலவரம் குறித்து தற்போது உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக கவலை தெரிவிக்கவும், கண்டனம் தெரிவிக்கவும் தொடங்கி உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரிசையாக கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது.

இந்தியா ஈரான்
பல நூறு வருடங்களாக இந்தியாவும், ஈரானும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தியா அரசும் அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். முக்கியமாக முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை வளர விட கூடாது, என்று மிகவும் கடுமையாக சாடி இருக்கிறார். இதில் அனைத்து இந்தியர்கள் என்ற வார்த்தையில் அனைத்து என்பதை (ALL) என்று பெரிய வார்த்தைகளில் எழுதி உள்ளார்.

டெல்லி கலவரம்
இந்தியா மீது டெல்லி கலவரம் தொடர்பாக முதல்முறை ஒரு நாடு நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ளது. கண்டனம் என்ற வார்த்தையை நேரடியாக ஈரான் பயன்படுத்தி இருக்கிறது. உலக நாடுகள் முழுக்க இவரின் கண்டனம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இவர் முட்டாள்தனமான குண்டர்கள் என்று குறிப்பிட்டு இருப்பதும் உலகம் முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் தலைவர்
இதற்கு முன்னர் ஈரான் தலைவர் அயோதல்லா காமேனேய் இதேபோல் இந்தியாவின் காஷ்மீர் கொள்கைகளை விமர்சித்து இருந்தார். காஷ்மீரில் இந்தியா கொடுமையை செய்து வருகிறது என்று குறிப்பிட்டார். ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி இதேபோல், காஷ்மீர் வன்முறைகளை, பாவப்பட்ட மக்களை கொல்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று 370 சட்ட பிரிவு நீக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்தியா ஈரான் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications