செந்தில் பாலாஜி வழக்கு- தீர்ப்பு வெளியான உடனே உச்சநீதிமன்றம் போன அமலாக்கத்துறை.. செம்ம ட்விஸ்ட்!
டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை இன்று வழங்கினர். இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமோ, உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி ஜூலை 24-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
அமலாக்க துறையால் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை கடந்த மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த 27 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை கடந்த 27 ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி நிஷா பானு, முதலில் தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில், சட்டவிரோத காவலில் இருப்பதாக மேலகாவின் மனு விசாரணக்கு உகந்தது. கைது சட்ட விதிகளின் படி இல்லை எனவே ஆட்கொணர்வு மனு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தீர்ப்பளித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி பின்னர் தனது தீர்ப்பை வாசித்தார். அதில் நீதிபதி நிஷா பானு தீர்ப்பை தாம் ஏற்கவில்லை எனவே அதில் தான் மாறு படுவதாகவும் கூறி தனது தீர்ப்பை வாசித்தார். மனுதரார் கணவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற காவலில் அடைத்து பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றி நடைபெற்றுள்ளது எனவே மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
நீதிமன்ற காவலிலேயே காவிரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். உடல்நிலை சரியாகும் வரையிலோ அல்லது இன்றிலிருந்து 10 நாட்களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை தொடரலாம்.
அதன் பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம்.
சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் தீர்ப்பளித்த நீதபதி இந்த வழக்கில் நான்கு சட்ட கேள்விகள் எழுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேகலா தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளதை குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிக்கும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக இரு நீதிபதிகளும் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்புகளை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மூன்றாவதாக யார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒரு நீதிபதியை நியமிப்பார். அவ்வாறு நியமிக்கப்படும் மூன்றாவது நீதிபதி தனியாக இந்த வழக்கை விசாரிப்பார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்த பிறகு ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தது சரியானது அல்ல. சட்டப்பூர்வமானதும் அல்ல. ஆகையால் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் இவ்வழக்கையே நீர்த்து போகச் செய்யும் என அமலாக்கத்துறை தரப்பில் த்ரிவிக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் அமலாக்கத்துறை அம்மனுவில் தெரிவித்திருந்தது.
ஆனால் உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றத்தை தாண்டி அமலாக்கத்துறை விரைவாக இங்கு வரவேண்டியது இல்லை. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு வாரத்துக்குள் 3-வது நீதிபதி அமர்வுக்கு ஆட்கொணர்வு வழக்கை அனுப்பி வைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய பின்னரே அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கவும் முடியும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications