செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவாரா? ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

Senthil Balajis wife Megala appeals in Supreme Court against Madras High Court order

அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற போதே செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு நீதிமன்ற அனுமதி பெற்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

இதனையடுத்து கடந்த மாதம் 21-ந் தேதி செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் கடந்த 4-ந் தேதியன்று இருவேறு தீர்ப்பை அளித்தனர்.

இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 14-ந் தேதியன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்து தீர்ப்பளித்த 3-வது நீதிபதி, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்றும், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்றும் தீர்ப்பளித்தார். இதற்கிடையில், செந்தில் பாலாஜி நேற்று முன் தினம் காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

அங்கிருந்து நேராக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விரைவாக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தால் தங்கள் கருத்தையும் கேட்க வெண்டும் என்று கேவியட் மனுவில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+