டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பாதிப்பு உயர்வு.. தேவை தனி மருத்துவமனைகள்.. அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகருமா இந்தியா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்துக் கொண்டு செல்வதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக மருத்துவமனையை ஏற்படுத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    இதுவரை, பொது மருத்துவமனைகளில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, இவ்வாறு பிற நோயாளிகளுக்கு மத்தியில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது நோய் பரவுதலை அதிகரித்து விடும் அபாயம் இருக்கிறது.

    Seperate hospitals for coronavirus patient to be build

    சீனாவில் இதே போன்ற நிலை ஏற்பட்டபோது, பத்தே நாளில் ஒரு மருத்துவமனையை இந்த சிகிச்சைக்காக கட்டி அசத்தியது அந்த நாட்டு அரசு. ஆனால், நம்மவர்கள் இன்னும் அந்த மாதிரி யோசனைக்கே வந்த மாதிரி தெரியவில்லை. முடிவெடுத்தாலும், அவ்வளவு வேகமாக செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. அதேநேரம் ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துவமனையை, இதற்காக பிரத்யேகமாக மாற்றக் கூடியதுதான் நம்மிடம் உள்ள உடனடி வாய்ப்பு.

    இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பார்கவா அளித்த பேட்டியில், ஒவ்வொரு மாநில அரசும் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தனியாக ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும், அல்லது ஒரு மருத்துவமனையை இதற்காக பிரத்யேகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.. பாதிப்பு 7 ஆக உயர்வு.. அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவிப்பு தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.. பாதிப்பு 7 ஆக உயர்வு.. அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவிப்பு

    ஆனால் இந்திய அரசு இந்த விஷயத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டாக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. துரிதமாக முடிவெடுத்தால் அடுத்த கட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக மாறினால்தான் பேரழிவுகளை நம்மால் சமாளிக்க முடியும்.

    English summary
    States have decided to build or keep one hospital aside for COVID -9, ICMR says.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X