டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்நியூஸ்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது நோவாவாக்ஸ் தடுப்பூசி.. 100% செயல்திறன் மிக்கது!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் செப்டம்பர் மாதத்திற்குள் நோவாவாக்ஸ் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. நோவாவாக்ஸ் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாகும்.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

    சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

    தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

    தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

    முதலில் மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் நாட்டில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

     நோவாவாக்ஸ் வருகிறது

    நோவாவாக்ஸ் வருகிறது

    பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஆர்வம் காட்டினாலும் தடுப்பூசி கிடைக்கவில்லை. இதனால் கூடுதல் தடுப்பூசி நிறுவனங்களை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி பயன்பாடு இந்தியாவில் செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று புனேவின் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இறுதிக்கட்ட சோதனை

    இறுதிக்கட்ட சோதனை

    அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே நோவாவாக்ஸ் தடுப்பூசி சோதனை இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை விரைவில் முடிவடையும் என்றும் செப்டம்பர் மாதத்திற்குள் நோவாவாக்ஸ் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் புனேவின் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.

    90 சதவீதம் பாதுகாப்பானது

    90 சதவீதம் பாதுகாப்பானது

    குழந்தைகளுக்கான கோவோவாக்ஸின் மருத்துவ பரிசோதனைகளை ஜூலை மாதத்தில் தொடங்கவும் மருந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். நோவாவாக்ஸ் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாகும். , நோவாவாக்ஸ்' தடுப்பூசி, மிகவும் பாதுகாப்பானது மற்றும் அதிக செயல்திறன் என்பதை மத்திய அரசே பாராட்டியுள்ளது. சோதனையின்போது நோவாவாக்ஸ் தடுப்பூசி தனது 100 சதவீத செயல்திறனை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Serum Institute of India plans to launch the Novavox vaccine in India by September
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X