திரும்பி பார்த்த எம்பி சுப்ரியா.. பக்கத்தில் போய் பேசியது ஏன்? மீம்ஸ்களுக்கு சசி தரூர் பளீர் பதிலடி!
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலேவுடன் நாடாளுமன்றத்தில் பேசியது என்ன என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.
உலகமும்.. சமுதாயமும் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் இன்னும் இந்தியாவில்
ஆணும் பெண்ணும் சகஜமாக பேசிக்கொள்வதை தவறாகவே பலரும் கருதி வருகிறார்கள்.
அதிலும் பொது வாழ்வில் இருப்பவர்கள் நட்பாக பேசிக்கொள்வதை கூட பலர் தவறான
கண்ணோட்டத்தில் பேசுவது உண்டு.
அப்படித்தான் காங்கிரஸ் எம்பி சசி தரூர் சகஜமாக பேசி ஒரு வீடியோ இணையம்
முழுக்க பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் எம்பி
காங்கிரஸ் எம்பி சசி தரூர் நேற்று முதல் நாள் லோக்சபாவில் இருக்கும் போது.. தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். சுப்ரியா சுலே பின்பக்கம் திரும்பி பேசிக்கொண்டு இருந்தார். அவர் முகத்திற்கு அருகே பெஞ்சில் முகத்தை வைத்து சசி தரூர் அவருக்கு பதில் தந்து கொண்டு இருந்தார். அப்போது ஜம்மு காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் எம்பி பரூக் அப்துல்லா அவையில் பேசிக்கொண்டு இருந்தார்.

சசி தரூர்
சுப்ரியா சுலே, சசி தரூர் இருவரும் இப்படி நெருக்கமாக பேசியது வீடியோவாக வெளியானது. பலர் இந்த வீடியோவையோ வெளியிட்டு கிண்டல் செய்து இருந்தனர். இரண்டு அரசியல் தலைவர்கள், அவையில் பேசிக்கொள்வது சகஜம். அவர்கள் ஆணோ, பெண்ணோ, அவையில் இரண்டு எம்பிக்கள் இப்படி பேசிக்கொள்வது எல்லாம் சாதாரண விஷயம். ஆனால் இதை வைத்து பலர் மீம் போட்டு இருந்தனர்.

சுப்ரியா சுலே
முக்கியமாக நெட்டிசன்கள் பலர் புஷ்பா பட ஸ்ரீவள்ளி பாடலை வைத்து மீம்களை போட்டு இருந்தனர். சில நெட்டிசன்கள், மூத்த பத்திரிகையாளர்கள் கூட இதை விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான மீம்கள், சர்ச்சைகளுக்கு தற்போது சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். அதில், மக்கள் சிலர் இப்படித்தான் பேசுவார்கள். அதுதான் அவர்களின் வேலை. நம் நாட்டில் சீதையே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார்.

சசி தரூர் விளக்கம்
நானும், சுப்ரியா சுலேவும் பேசிக்கொண்டதை பகிர்ந்து பலர் காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவையில் அவர் பாலிசி தொடர்பாக கேள்வி ஒன்றை கேட்க இருந்தார். அப்போது என்னிடம் அது தொடர்பாக சந்தேகம் கேட்டார். அடுத்து அவர்தான் கேள்வி கேட்க வேண்டும். அருகே பருக் அப்துல்லா அவையில் பேசிக்கொண்டு இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய கூடாது என்று அவர் அமைதியாக பேசினார். இதனால் நான் அவர் அருகே சென்று அவர் பேசுவதை கேட்டேன், என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications