ஃபேஸ்புக் விவகாரம்- காங். சசி தரூர், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரஸ்பரம் உரிமை மீறல் புகார்கள்
டெல்லி: ஃபேஸ்புக் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவும் பரஸ்பரம் உரிமை மீறல் புகார்களை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்திருக்கின்றனர்.
Recommended Video
இந்தியாவில் வெறுப்பை தூண்டும் பதிவுகளை ஃபேஸ்புக் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் பக்க சார்புடன் நடந்து கொள்கிறது என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக நாடு முழுவதும் அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவின் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூ்ர், ஃபேஸ்புக் தொடர்பாக விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனை பாரதிய ஜனதா கட்சி எம்பி நிஷிகாந்த் துபே விமர்சனம் செய்திருந்தார்.
மேலும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதல் எதனையும் பெறாமல் சசி தரூர் செயல்படுவதாகவும் நிஷிகாந்த் குற்றம்சாட்டி இருந்தார். இதனால் கோபம் அடைந்த சசி தரூர், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரான என் அதிகாரம், உரிமையை மீறும் வகையில் நிஷிகாந்த் விமர்சித்திருப்பதால் அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள நிஷிகாந்த் துபே, நான் எப்போதும் உரிமை மீறல்களில் ஈடுபட்டது இல்லை; அதிகாரங்களை தவறாக பயன்படுத்தவும் அனுமதிக்கவும் போவதில்லை என்றார். அத்துடன் சசி தரூர் மீதும் உரிமை மீறல் புகாரை நிஷிகாந்த் துபே கொடுத்திருக்கிறார்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications