Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி ஓகே.. ஆனா வேலையே இல்லாத இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன சொல்ல போகிறது! சசி தரூர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரு.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என அறிவித்தார். இதற்கிடையே மத்திய பட்ஜெட்டை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், மாத சம்பளதாரர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் வேலையில்லாதவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் எந்தவொரு தீர்வும் இல்லை என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

budget 2025 union budget 2025 shashi tharoor 2025

மத்திய பட்ஜெட்:

தொடர்ந்து இன்று பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. மத்திய பட்ஜெட்டை ஆளும் தரப்பினர் வரவேற்று வருகிறார்கள். அதேநேரம் இந்த மத்திய பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.

அதன்படி மத்திய பட்ஜெட்டை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், வருமான வரி குறைக்கப்பட்டது ஓகே தான் என்ற போதிலும், வேலை இல்லாதவர்களுக்கு மத்திய அரசு என்ன பதிலை வைத்திருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்

சசி தரூர்:

மத்திய பட்ஜெட் தொடர்பாக சசி தரூர் மேலும் கூறுகையில், "பாஜக எம்பிக்கள் கூட மிடில் கிளாஸ் மக்களுக்கான வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வந்த போது மட்டுமே கைதட்டி வரவேற்றனர். நாங்கள் பட்ஜெட்டை முழுமையாக அலசி வருகிறோம். இது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம். நீங்கள் மாத சம்பளதாரராக இருந்தால் இனி நீங்கள் குறைவாக வரி செலுத்தினால் போதும்.. அது ஓகே.. ஆனால், சம்பளம் வாங்க முடியாதவர்களின் நிலை என்னவாகும்.

உண்மை தான்.. நீங்கள் ஒரு வேலையில் இருந்து உங்களுக்கு ஆண்ட சம்பளமாக ரூ. 12 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக வருகிறது என்றால்.. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால், வேலையில்லாத இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன திட்டத்தை வைத்திருக்கிறது.. வேலையில்லா திண்டாட்டம் குறித்து எதையும் இந்த அரசு பேசவில்லை.

வார்த்தை கூட இல்லை:

வேலையில்லா திண்டாட்டம் அல்லது பணவீக்கம் என்ற வார்த்தைகளைக் கூட இன்று நிதியமைச்சரிடம் இருந்து நாங்கள் கேட்கவில்லை. கருணை கொண்டு அவர் தனது பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் அல்லது பணவீக்கம் குறித்து அவர் எதையும் பேசவில்லை.

வரும் நாட்களில் எங்கெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ.. அந்த மாநில மக்களுக்காக பாஜக அரசு பட்ஜெட்டை பயன்படுத்துகிறது. நீங்கள் பீகாரில் வசிக்கிறீர்கள்.. அல்லது பாஜக கூட்டணிக் கட்சி ஆட்சியிலுள்ள மாநிலங்களில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மட்டுமே இதனால் லாபம்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

வருமான வரி விலக்கு:

இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையில் இருப்போருக்கு ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை, (ஊதியதாரர்கள் என்றால் 12.75 லட்சம் ரூபாய்) வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.. நியூ ரெஜிம் தேர்வு செய்தோர் வரி ப்ரூப் தரவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+