காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா போட்டி?... பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனம்
டெல்லி: பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பிரபல நடிகரும், முன்னாள் மத்தியமைச்சருமான சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடி பிரதமர் மீது சத்ருகன் சின்ஹா குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் அவரை பாஜகவில் இருந்து நீக்குவதோ அல்லது எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

அதேநேரம் , 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கு சத்ருகன் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்னா சாஹிப் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பேரணியில் கூட பாஜகவை சேர்ந்த சத்ருகன் சின்ஹா பங்கேற்றார். அப்போது பாஜகவில் நான் இருந்தாலும் கூட, நாட்டின் முன்னேற்றமே முக்கியம் என்று அப்போது தெரிவித்திருந்தார்.
இதேபோல், கடந்த மாதம் லல்லு பிரசாத் யாதவின் மகனான தேஜாஷ்வி யாதவை சத்ருகன் சின்ஹா சந்தித்துப்பேசினார். அப்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் சத்ருகன் சின்ஹா இணைய உள்ளதாக தகவல் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்த அவர், நான் எங்கு போட்டியிடுவேன், எந்த சின்னமாக இருக்கும் என்ற எனது எதிர்கால போக்கைப் பற்றி அனைவரும் விரைவில் அறிவீர்கள் என்றார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications