Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புர்கா கூட அணிய மாட்டார்!" டெல்லி கார் வெடிப்பில்.. சிக்கிய பெண் தீவிரவாதி ஷஹீனின் மாஜி கணவர் பகீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷஹீன் சயீத்தின் முன்னாள் கணவர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஷஹீன் சயீத் உடன் இருந்தபோது அவர் தீவிரவாதம் அல்லது அடிப்படைவாதத்தில் ஈடுபட்டதே இல்லை என்று மாஜி மனைவி மீதான குற்றச்சாட்டுகளை நம்பவே முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்பு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிக் கைதானவர்களில் ஒருவர் தான் பெண் மருத்துவர் ஷஹீன் சயீத். இதற்கிடையே அவரது முன்னாள் கணவர் இப்போது சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

She Never Wore Burqa Delhi Red fort Blast suspct Shaheen Sayeed s Past Revealed by Ex-Husband

புர்கா கூட அணிய மாட்டார்

திருமணச் சடங்குகள் தவிர்த்து ஷஹீன் ஒருபோதும் புர்கா கூட அணிந்ததில்லை என்று டாக்டர் ஜாஃபர் ஹயாத் கூறினார். மேலும், ஷஹீன் ஒரு அன்பான, அக்கறையுள்ள நபராகவும், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு அர்ப்பணிப்புள்ள தாயாகவும் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஷஹீன் சயீத், நவம்பர் 10ம் தேதி டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாகச் சொல்லி கைது செய்யப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

யார் இந்த ஷஹீன்

ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வாத்-உல்-ஹிந்த் போன்ற தடை செய்யப்பட்ட குழுக்களுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத அமைப்புடன் ஷஹீன் தொடர்பில் இருந்ததாகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்காகப் பெண்களைச் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய ஜமாத்-உல்-மோம்மினாட் என்ற பெண்கள் பிரிவின் தலைவராக ஷஹீன் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்..

இந்த ஷஹீனை தான் கடந்த 2003ல் டாக்டர் ஹயாத் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அவர்களின் திருமண வாழ்க்கை 9 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2012ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதற்கிடையே ஷஹீனின் பயங்கரவாத நடவடிக்கைகளில் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஹயாத் தெரிவித்தார்.

2012ல் விவாகரத்து

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவரை நான் ஒருபோதும் புர்காவில் பார்த்ததே இல்லை. பயங்கரவாத நடவடிக்கைகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எங்களுக்கு 2012இல் விவாகரத்து நடந்துவிட்டது. அதன் பிறகு அவர் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டிருக்கலாம்.. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

திருமண வாழ்க்கையில் இருந்தபோது எங்களுக்குள் எந்தவொரு பெரிய பிரச்சனைகளும் இல்லாமல் இருந்தது. எங்களுக்குள் ஒருபோதும் சண்டையோ அல்லது வாக்குவாதமோ நடந்ததில்லை. அவர் ஒரு அன்பான, அக்கறையுள்ள நபராக இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றபோதும் கூட அது சுமுகமாகவே நடந்தது.. விவாகரத்துக்குப் பிறகு எங்களுக்குள் எந்தவொரு தொடர்பும் இல்லை.

வெளிநாடு செல்லவே ஆர்வம்

ஷஹீன் சிறந்த வாழ்க்கைக்காக வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டினார்.அதிகச் சம்பளம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில் குடியேறலாம் என்று சொன்னார். இருப்பினும், அதை நான் ஏற்கவில்லை. இங்கேயே நல்ல வேலையில் தான் இருக்கிறோம். குழந்தைகளும் இருக்கிறார்கள். உறவினர்கள் அனைவரும் இங்கு தான் இருக்கிறார்கள். வெளிநாடு போனால் தனிமையில் தான் இருக்க வேண்டும் என நான்தான் விளக்கினேன்.

நாங்கள் ஒன்றாக இருந்தபோது ஷஹீன் சட்டவிரோதமான அல்லது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது போல எனக்குத் தோன்றியதே இல்லை. அவர் தனது குழந்தைகளுடன் எப்போதும் இணைந்திருந்தார்.. குழந்தைகளை ரொம்பவே நேசித்தார். அவர்களின் படிப்பிலும் அக்கறை காட்டினார். விவாகரத்துக்குப் பிறகு எங்களுக்குள் நேரடியாகத் தொடர்பு இல்லை. அவர் வெளிநாட்டுக்குப் போய்விட்டதாகவே நினைத்தேன். சமீபத்தில் தான் அவர் இந்தியாவில் இருப்பதே எனக்குத் தெரிய வந்தது.

நம்ப முடியவில்லை

அதேநேரம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக நான் ஷஹீனுடன் நேரடியாகத் தொடர்பில் இல்லை.. அவரது குடும்பத்தினர் தான் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். ஆனாலும், கூட அவர் தீவிரவாத இயக்கங்களுடன் இருப்பார் என்பதை நம்ப முடியவில்லை" என்றார்.

லக்னோவில் உள்ள ஷஹீனின் வீட்டிற்கு அவர் எப்போதாவது சென்றிருக்கிறாரா என்று கேட்டதற்கு, "நான் அவரது வீட்டிற்குச் சென்றதில்லை.. ஐஐஎம் சாலைக்கு அருகில் தான் வீடு என தெரியும். ஆனால், நீண்ட காலமாகத் தொடர்பு இல்லாததால் அவரது வீட்டிற்கு நான் போனதில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+