15 வயதிலேயே ‛அப்படி’.. ஷிகர் தவானுக்கு எச்ஐவி பரிசோதனை.. ‛‛டாட்டூ’’வால் வந்த வினை.. என்ன நடந்தது?
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் தான் ஷிகர் தவான் தனது 15 வயதில் வீட்டுக்கு தெரியாமல் ‛டாட்டூ' குத்தியதும், அதன்பிறகு அவர் தனது தந்தையிடம் அடிவாங்கியதோடு எச்ஐவி பரிசோதனை செய்து சந்தித்த துயரம் பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஜொலித்தவர் ஷிகர் தவான். இடதுகை பேட்ஸ்மேன்னான இவர் சிறந்த பீல்டராகவும் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது இளம்வீரர்களின் எழுச்சியால் ஷிகர் தவானால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை உள்ளது.
இருப்பினும் ஷிகர் தவான் தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் களமிறங்க உள்ளார். ஷிகர் தவான் கிரிக்கெட் மைதானத்திலும் சரி, கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியேவும் சரி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில் தவறுவதே இல்லை.

ரசிகர்களை மகிழ்விக்கும் தவான்
இதனால் தான் தவானுக்கு என்று இந்தியாவின் பல இடங்களில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதாவது கிரிக்கெட் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டம் மற்றும் பீல்டிங்கில் கேட்ச் செய்தால் தொடையை தட்டி, மீசையை முறுக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே என்றால் பாடல்களுக்கு வித்தியாசமான முறையில் நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்.

எச்ஐவி சோதனை
இதுதவிர அவரது சிகை அலங்காரம், வித்தியாசமான டாட்டூக்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு களத்துக்கு வெளியேயும், உள்ளேயும் ஷிகர் தவான் சிறந்த என்டர்டெய்மெண்ட்டராக உள்ளார். இந்நிலையில் தான் ஷிகர் தவான் எச்ஐவி பரிசோதனை செய்தது தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அவரே தற்போது தனியர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஷிகர் தவான் கூறியதாவது:

15 வயதில் நடந்த சம்பவம்
எனக்கு 14 முதல் 15 வயது இருக்கும்போது நான் மணாலிக்கு சென்றனே். அப்போது எனது குடும்பத்துக்கு தெரியாமல் என் முதுகில் டாட்டூ குத்தினேன். இதனை வீட்டில் கூறினால் அடிப்பார்கள் என்பது தெரியும். இதனால் டாட்டூ குத்தியதை வீட்டில் சொல்லாமல் இருந்தேன். சுமார் 4 மாதங்களுக்கு பிறகு டாட்டூ குத்தியிருப்பதை என் தந்தை பார்த்துவிட்டார். அவர் என்னை அடித்தார்.

எச்ஐவி சோதனையில் என்ன முடிவு?
பலபேருக்கு டாட்டூ குத்த பயன்படுத்தப்பட்ட ஊசி தான் உனக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என கூறினார். இதனால் நான் பயந்துவிட்டேன். இதனால் உடலில் பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்தேன். அப்போது எச்ஐவி பரிசோதனை செய்தேன். அது நெகட்டிவ்வாக(சிரித்தபடி) வந்தது. எனது முதுகில் நான் முதலில் தேள் படத்தை டாட்டூவாக குத்தினேன். அதன்பிறகு அதனை வேறு டிசைனாக மாற்றினேன். மேலும் கையில் சிவபெருமான் உள்பட பல டாட்டூகளை குத்தினேன்'' என்றார்.

சுப்மன் கில்லுக்கு பாராட்டு
மேலும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பற்றி ஷிகர் தவான் சில விஷயங்களை கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறங்கி வருகிறார். அவர் சிறப்பாக செயல்படுகிறார். நான் தேர்வுக்குழுவில் இருந்தால் தொடர்ந்து அவருக்கு பல ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு வழங்குவேன்'' என்றார்.

தேசிய அணிக்கு திரும்பாதது ஏன்?
அதோடு இந்திய அணிக்கு மீண்டும் ஷிகர் தவான் தேர்வு செய்யயப்படாதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷிகர் தவான், ‛‛இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை என்னால் கொடுக்க முடியும். இதற்காக தொடர்ந்து பயிற்சியில் இருக்கிறேன். தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படாவிட்டாலும் கூட நான் எனது பயிற்சியை தொடர்ந்து வருகிறேன்'' என்றார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications