காரில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட பெண்! மூளையை காணோம்! பாகங்கள் மிஸ்ஸிங்! பிரேத பரிசோதனையில் ஷாக்
டெல்லி: புத்தாண்டு அன்று அதிகாலை டெல்லியில் நடந்த கோர விபத்தில் அஞ்சலி எனும் 20 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அஞ்சலியின் உடற்கூறாய்வு முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த 1ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் இந்த கொண்டாட்டம் நள்ளிரவு கடந்து நீண்ட நேரம் நீடித்தது. இதனையடுத்து சுமார் 1.30 மணியளவில் அனைவரும் பொது இடங்களிலிருந்து கலைந்து சென்றனர். அப்படி இருக்கையில் அஞ்சலி மற்றும் நிதி என்ற இரண்டு இளம்பெண்கள் கஞ்சவாலா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்திருக்கின்றனர். அப்போது மணி அதிகாலை 2.30.
உணவுக்காக காத்திருந்த நிலையில் இருவரம் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு கட்டத்திற்கு மேல் சண்டையாக உருவெடுத்துள்ளது. பின்னர் ஓட்டிலிலேயே சண்டையிட்டுள்ளனர். ஓட்டல் ஓனர் அவர்களை தடுத்து இங்கே சண்டையிடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். பின்னர் சாப்பிட்டுவிட்டு இருவரும் பைக்கை தள்ளிக்கொண்டு நடந்து சென்றுள்ளனர். அப்போதும் இருவருக்கிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து
இதனையடுத்து பைக்கில் இருவரும் ஒன்றாக பயணித்துள்ளனர். பின்னர் நிதியை அவரது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, அஞ்சலி மட்டும் தனியாக பைக்கில் அவரது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். பைக் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு அருகில் வந்தபோது திடீரென கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. என்ன செய்வதென்று புரியாமல் அஞ்சலி விழிக்க அடுத்த கனமே கார் அவரை மோதியுள்ளது. பலத்த சத்தம் கேட்டு அவரது தோழி திரும்பி பார்த்துள்ளார். இந்த விபத்து தோழியின் வீட்டின் அருகே அவரது கண் முன்னேதான் நடந்திருக்கிறது. விபத்தில் அஞ்சலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணை
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய டெல்லி காவல்துறைக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அஞ்சலியை கார் அதி வேகமாக மோதிய நிலையில் அஞ்சலி அதில் சிக்கிக்கொண்டார். சுமார் 5 கி.மீ தூரம் வரை அஞ்சலி காரின் அடியில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக காரின் ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக விசாரித்து உரிய அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.

நிவாரணம்
விசாரணை அறிக்கையில் இந்த விபத்து அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளில் பதிவானதைவிட சற்று கூடுதல் தொலைவுக்கு அஞ்சலி இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று (ஜன.03) அஞ்சலியின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக அஞ்சலியின் தோழியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என டெல்லி மகளர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அஞ்சலியின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

மண்டை ஓடு
இந்நிலையில் தற்போது இந்த பிசேத பரிசோதனை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அஞ்சலி காரின் அடி பாகத்தில் சிக்கிக்கொண்டதால் அவரது உடல் முழுவதும் பலத்த சிராய்ப்புகள் உருவாகியுள்ளன. உடைகள் கிழிக்கப்பட்டுள்ளன. இவரது தாயார் அஞ்சலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால் அதற்கான எந்த அடையாளமும் அஞ்சலியிடம் காணப்படவில்லை. சிராய்ப்புகள் காரணமாக மார்பு விலா எலும்புகள் தேய்ந்துள்ளது. அதேபோல மண்டை ஓடு உடைந்து மூளையின் சில பாகங்கள் காணாமல் போயுள்ளது.

சேறு சகதி
தலை, முதுகு தண்டு, தொடை, கை, கால்கள் ஆகியவற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் அதிக ரத்த கசிவு காரணமாக அஞ்சலி உயிரிழந்திருக்கிறார். அவர் உயிரிழந்த பின்னரும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது அவர் காரில் சிக்கி உயிருக்கு போராடி மரணத்திருப்பது கூட தெரியாமல் சம்பந்தப்பட்ட நபர் காரை இயக்கியுள்ளார். அஞ்சலி மீட்கப்படும்போது அவரது உடல் முழுவதும் சேறும் சகதியும் இருந்திருக்கிறது என்று பிரேசத பரிசோதனை அறிக்கை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications