நம்பர் கேம்.. மசோதாவை நிறைவேற்ற பாஜக கையில் எடுக்கும் யுக்தி! வெளியான ஷாக் தகவல்!
டெல்லி: தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு ஆதரவு அவசியம். ஆனால், சிம்பிளான நம்பர் கேம் மூலமாக இந்த சட்டத்தை பாஜக நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதற்கு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 368தான் உதாரணம். இதில் இரண்டு நிபந்தனைகள் உள்ளன.

- நிபந்தனை 1 (மொத்த பலத்தில் பாதி): அவையின் மொத்த இடங்களான 543-ல் குறைந்தபட்சம் 272 பேர் ஆதரிக்க வேண்டும்.
- நிபந்தனை 2 (வாக்களிப்பவர்களில் 2/3 பங்கு): அன்று அவைக்கு வந்து வாக்களிப்பவர்களில் 66.6% பேர் ஆதரிக்க வேண்டும்.
பாஜகவின் பலம்
ஆளும் NDA கூட்டணிக்கு 294 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் முதல் நிபந்தனையான 272-ஐ எளிதாகக் கடந்துவிடுவார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் (சுமார் 246 உறுப்பினர்கள்) அவைக்கு வந்து வாக்களித்தால், மசோதாவை நிறைவேற்ற 362 வாக்குகள் தேவைப்படும். இங்குதான் பாஜகவுக்கு 68 வாக்குகள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
நம்பர் கணக்கு
இந்த இடத்தில், எதிர்க்கட்சிகளில் ஒரு பகுதியை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்ய வைத்தால், விஷயம் தலைக்கீழாக மாறிவிடும். உதாரணத்திற்கு, 100 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவையில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 443 ஆகக் குறையும். இப்போது 443-ல் 2/3 பங்கு என்பது வெறும் 295 வாக்குகள் மட்டுமே. ஆளும் தரப்பிற்கு இன்னும் 1 அல்லது 2 வாக்குகள் கிடைத்தால் கூட மசோதா நிறைவேறிவிடும்.
எதிர்க்கட்சிகளின் பிளான்
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. அனைவரும் அவையில் இருந்து எதிர்த்து வாக்களித்தால் மட்டுமே மசோதாவைத் தடுக்க முடியும். மறுபுறம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRCP) அல்லது பிஜு ஜனதா தளம் (BJD) போன்ற கட்சிகள் என்ன செய்யப்போகின்றன என்பது மசோதாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications