"மீண்டும் மீண்டுமா.." மிரட்டும் எரிஸ் கொரோனா.. ரொம்பவே வேகமாக பரவுகிறதாம்! இந்தியாவுக்கு ஆபத்தா?
டெல்லி: பிரிட்டன் நாட்டில் புதிதாக எரிஸ் வகை கொரோனா பரவ தொடங்கியுள்ள நிலையில், இது எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.. குறிப்பாக இந்தியர்கள் இது குறித்து கவலை கொள்ள வேண்டுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் கடந்த 2019இல் முதலில் சீனாவில் பரவ தொடங்கியது.. கொரோனா தொடங்கிய சமயத்தில் அது இந்தளவுக்கு மோசமானதாக இருக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. கொரோனாவால் ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன.

மேலும், இதனால் நமக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளும் ரொம்பவே மோசம். கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் நமக்கு அப்படியே போய்விட்டது. இப்போது தான் வேக்சின் உள்ளிட்ட பணிகளால் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம்.
எரிஸ் கொரோனா: இப்போது தான் மாஸ்க் கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் நம்மை மிரட்ட ஆரம்பித்துள்ளது. பிரிட்டனில் இந்த புதிய வகை கொரோனா வேரியண்ட்டான 'எரிஸ்' பரவுவது சுகாதார பணியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இப்போது பதிவாகும் கொரோனாவில் இந்த எரிஸ் கொரோனா தான் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் உலக நாடுகள் கவலையடைந்துள்ளன.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்தச் சூழலில் இப்போது மீண்டும் இந்த புதிய வகை எரிஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இந்த எரிஸ் கொரோனாவால் கேஸ்கள் அதிகரித்து எங்கு மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படுமோ என்று அஞ்சப்படுகிறது. இதுவரை இந்தியாவில் யாருக்கும் இந்த எரிஸ் வகை கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

கொரோனா அலை: இருப்பினும், இது வேகமாகப் பரவும் நிலையில், இது விரைவில் இந்தியாவிலும் பரவும் என்றே கூறப்படுகிறது. நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலையை இது ஏற்படுத்தினால் பாதிப்பு ரொம்பவே மோசமாக இருக்கும் எனப் பொதுமக்கள் அஞ்சுகின்றனர். கொரோனா காரணமாக இழந்த வேலைவாய்ப்புகளே இன்னும் மீண்டும் முழுமையாகச் சரியாகாத நிலையில், மீண்டும் இந்த எரிஸ் கொரோனா பரவுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புது வகை எரிஸ் கொரோனாவால் நாம் உண்மையில் கவலை கொள்ள வேண்டுமா என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வேரிண்யண்டை பார்த்து நாம் அச்சமடையத் தேவையில்லை.. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு ஏற்கனவே கொரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றல் இருக்கிறது. இது பெரியளவில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இருப்பினும், கொரோனா தொற்று பரவாமல் இருக்க மக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்... நாட்டில் இப்போது கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்ற போதிலும், நாம் கொரோனா நெறிமுறையைக் கடைப்பிடிப்பது காலத்தின் தேவை.. கொரோனா அறிகுறிகள் எதாவது தென்பட்டால் உடனடியாக நாம் மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும்.

கவலை வேண்டாம்: பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளில் கொரோனா கேஸ்கள் திடீரென அதிகரித்துள்ளன. இப்போது பிரிட்டனில் பதிவாகும் 7இல் ஒரு கேஸ் இந்த புதிய 'எரிஸ்' வேரியண்டாக இருக்கிறது. இந்த கண்காணிக்கப்படும் வேரியண்டாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இருப்பினும், இப்போது நாம் இந்தியாவில் இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.
ஏற்கனவே இந்தியாவில் நான்கு கொரோனா அலைகள் ஏற்பட்டுவிட்டது.. இந்தியர்களிடையே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் வேக்சின் பணிகளால் இங்கே கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.. எரிஸ் காரணமாக கேஸ்கள் அதிகரித்தாலும், இதனால் தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. கொரோனா மட்டுமின்றி இந்த மழைக்காலத்தில் அனைத்து விதமான தொற்று நோய்களும் அதிகம் ஏற்பட்டு வருகிறது. நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications