Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோளில் பை.. கையில் அட்டைப்பெட்டி.. விடிகாலையில் கேஷூவலாக தெருவில் நடந்து போகும் அப்தாப்.. ஷாக் வீடியோ

ஷ்ரத்தா கொலை வழக்கில் சிசிடிவி காட்சியை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஷ்ரத்தா கொலை வழக்கில், திடீர் திருப்பமாக ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. கடந்த அக்டோபர் 18 தேதியன்று, தன்னுடைய வீட்டில் இருந்து அப்தாப் கையில் கொண்டு ஒரு பையை கொண்டு சென்றது அந்த வீடியோவில் பதிவாகி திகிலை கூட்டி வருகிறது.

கடந்த மே 18ம் தேதி ஷ்ரத்தா - அப்தாப் இருவருக்கும், தகராறு வெடித்துவிட்டது.. ஷ்ரத்தாவை அஃப்தாப் தாக்கியபோது அவர் கத்தி கூச்சல் எழுப்பியதால், அஃப்தாப்புக்கு ஆத்திரம் அதிகமாகி, ஷ்ரத்தாவின் வாயையும் மூக்கையும், தலைகாணியை எடுத்து நீண்ட நேரம் அழுத்தியதில், ஷ்ரத்தா துடிதுடித்து இறந்தார்..

இதற்கு பிறகு, பீர் குடித்துக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டும், ஜொமேட்டாவில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டும், நெட்ஃபிளிக்சில் சினிமா பார்த்துக்கொண்டும், நடுநடுவே ரெஸ்ட் எடுத்துக் கொண்டும், ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் துண்டு துண்டாக வெட்டி இருக்கிறார்..

 10 மணி நேரம்

10 மணி நேரம்

35 துண்டுகளாக வெட்டி முடிக்க, 10 மணி நேரம் ஆகி இருக்கிறது என்று போலீசார் விசாரணையில் கூறியுள்ளார் அப்தாப்.. ஒவ்வொரு உறுப்பையும் வெட்டியபிறகு, ரத்தக் கசிவு இல்லாமல், தண்ணீரில் நன்றாக அலசி இருக்கிறார்.. கிச்சனில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் ரத்தக்கரை இருந்திருக்கிறது . அதை தடயவியல் அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளார்கள். மேலும் 32 துண்டுகளாக அறுக்க பயன்படுத்திய ரம்பம் ஒன்றும் இருந்துள்ளது. அதையும் போலீசார் மீட்டுள்ளனர்.

 கெமிக்கல்

கெமிக்கல்

அப்தாப் வீட்டை ஆய்வு செய்த தடயவியல் அதிகாரி இதை பற்றி சொல்லும்போது, "அனைத்து ஆதாரங்களையும் அப்தாப் அகற்றிவிட்டான்... பிரிட்ஜ் முதல் வீட்டின் எல்லா பகுதியையும் சுத்தமாக கெமிக்கல் ஊற்றி கழுவி விட்டுள்ளான்.. கிச்சனில் மட்டும் ரத்தக்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... அதுவும் சோதனைக்கு பிறகுதான் தெரியவரும்" என்றார்.. எனினும், அப்தாப் வீட்டில் எந்த ஒரு சின்ன ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கருதுவதால், இந்த வழக்கில் ஆதாரங்களை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கும் என்றும் சொல்லி வருகிறார்கள்.

நெட்ஃபிளிக்ஸ்

நெட்ஃபிளிக்ஸ்

குற்றம் சாட்டப்பட்ட அப்தாப் கொலை செய்ததுமே ஃபுல் போதையில் இருந்ததாக தெரிகிறது.. எப்போதுமே கஞ்சாவை அதிகம் பயன்படுத்தும் அப்தாப் அன்றைய தினம், சற்று அதிகமாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்.. இந்த கொலை விசாரணை தொடர்பாக, மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு டெல்லி போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன... மற்றொருபக்கம், ஷ்ரத்தாவின் நண்பர்கள் தரப்பில் வேறு ஒரு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன..

 பை - தோள்

பை - தோள்

உண்மையாக காதலிக்கும் ஒருவரால், தன்னுடைய காதலியை 35 துண்டுகளாக எப்படி வெட்ட முடியும்? இவ்வளவு கொடூரமாக கொலை செய்யவே முடியாது என்பதால், இதற்கு பின்னணியில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்றும், அதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.. அதில், விடிகாலை நேரத்தில் அப்தாப் கையில் ஒரு பையுடன் தெருவில் நடந்து வருவது பதிவாகி உள்ளது.

 கை, கால்கள்

கை, கால்கள்

அப்தாப் தன்னுடைய வாக்குமூலத்தில், சம்பவத்தன்று இரவு, ஷ்ரத்தாவுக்கும் எனக்கும் சண்டை நடந்தது. இதற்கு முன்பும் பலமுறை வாக்குவாதம் தகராறு நடந்து வந்தது. ஆனால் அன்று விஷயம் பெரிதாகிவிட்டது. அப்போது நான் ஷ்ரத்தாவின் கழுத்தை நசுக்கினேன்... அதைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவை கீழே தள்ளி, அவளது மார்பின் மீது அமர்ந்து, 2 கைகளாலும் கழுத்தை நெரித்தேன். சிறிது நேரத்தில் அவள் இறந்துவிட்டாள் என்று கூறியிருந்தார்.

 விடிகாலை 4 மணி

விடிகாலை 4 மணி

இந்நிலையில்தான், அக்டோபர் 18ம் தேதி சிசிடிவி வீடியோவை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளனர்.. அதில் குற்றம் சாட்டப்பட்ட அப்தாப் ஒரு பையுடன் நடந்து வருகிறார்.. விடிகாலை 4 மணிக்கு அந்த காட்சி பதிவாகி உள்ளது.. அந்த தெருவில் யாருமே காணப்படவில்லை.. அப்தாப் மட்டும் தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு நடந்து வருவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. அநேகமாக, அந்த பையில் ஷ்ரத்தாவின் உடல்பாகங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.. இருட்டில் மங்கலாக பதிவான அந்த வீடியோவில், பையை மாட்டிக்கொண்டு, கையில் அட்டைப்பெட்டியுடன் தெருவில் நடந்து செல்வது பதிவாகி உள்ளது.. ஆனால், முகம் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும், அது அப்தாப்பாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள் போலீஸார்.

 பீஸ் பீஸாக

பீஸ் பீஸாக

35 துண்டுகளாக வெட்டிய நிலையில், ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் என்று நம்பப்படும் 13 பாகங்கள் மட்டுமே தற்போது மீட்கப்பட்டு உள்ளன.. மற்ற பாகங்களை டெல்லியின் மெஹ்ராலி வனப்பகுதியில் வீசி எறிந்திருக்கலாம், அந்தவகையில், பையில் அவைகளை அப்தாப் கொண்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில், மெஹ்ராலி வனப்பகுதியில் ஷார்தாவின் உடல் உறுப்புகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.. கொலை செய்து உறுப்புகளை வெட்டி, அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு தினமும் இரவு 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்ததாக தினமும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

 அப்பார்ட்மென்ட்

அப்பார்ட்மென்ட்

அதுமட்டுமல்ல, அப்தாப் வீட்டின் அருகே குடியிருப்பவர்கள், "நைட் நேரத்தில் வெளியே போகவே பயமாக இருக்கு.. யாரோ அழற சத்தம் கேட்குது... ஜுன், ஜூலை மாசத்தில், இந்த அபார்ட்மென்டை சுற்றி நிறைய நாய்கள் ஊளையிட்டு கொண்டே இருந்தன.. அதை நினைச்சாலே எங்களுக்கு கை, கால் உதறல் எடுக்குது" என்று அதிர்ச்சி விலகாமல் சொல்லி இருந்தனர்.. ஒருவேளை, அப்தாப், நாய்களுக்கு உறுப்புகளை வீசியெறிவதற்காககூட இப்படி வெளியே சென்றிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.. எப்படி பார்த்தாலும், தற்போது வெளியாகி உள்ளது இந்த சிசிடிவி காட்சியை அடிப்படையாக வைத்து, அடுத்தக்கட்ட விசாரணைக்கு துரிதமாக நகர்ந்துள்ளனர் டெல்லி போலீஸ்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+