வாயை மூடு! இது உனக்கு நல்லது கிடையாது! பெட்ரோல் விலையேற்றம் குறித்த கேள்விக்கு பாபாராம்தேவ் பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கேள்வி கேட்ட நிருபரிடம் ‛‛வாயை மூடு, இது உனக்கு நல்லது கிடையாது'' என பாபா ராம்தேவ் கூறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் ஜனவரியில் அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி, மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் முடிந்தது. மார்ச் 10ல் தேர்ல் முடிவுகள் வெளியானது. இதில் பஞ்சாப் தவிர பிற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்தது.

 பெட்ரோல், டீசல் விலையேற்றம்

பெட்ரோல், டீசல் விலையேற்றம்

இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 137 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டன. தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில நாட்களிலேயே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்ததால் எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் நாடு முழுவதும் பல இடங்களில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

இந்நிலையில் தான் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ட யோகா குரு பாபா ராம்தேவ் அரியானா மாநிலம் கார்னலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் குறித்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

குறைத்தால் வரி கிடைக்காது

குறைத்தால் வரி கிடைக்காது

‛‛பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை குறைத்தால் தங்களுக்கு வரி கிடைக்காது என அரசு கூறுகிறது. வரி இல்லாவிட்டால் எப்படி அவர்கள் நாட்டை ஆளுவார்கள்?. சம்பளம் கொடுப்பார்கள்?. சாலை, விமான நிலையங்கள் அமைப்பார்கள்?. நாட்டின் பணவீக்கம் குறைய என்னதை ஒப்புக்கொள்கிறேன். இந்த சூழலில் மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் கூட அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை வேலை செய்கிறேன்'' என்றார்.

நிருபர் கேள்வி

நிருபர் கேள்வி

இந்த வேளையில் நிருபர் ஒருவர், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40, எரிவாயு சிலிண்டர் ரூ.300க்கு வழங்கும் பாஜக கட்சியின் அரசாங்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியதை மேற்கொள் காட்டி தற்போதைய விலையேற்றம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ராம்தேவ், ‛‛ஆம், நான் அவ்வாறு கூறினேன். உன்னால் என்ன செய்ய முடியும்?. இதுபோன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்க வேண்டாம். உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டுமா?'' என கூறினார்.

நல்லது கிடையாது

நல்லது கிடையாது

இருப்பினும் விடாத நிருபர் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த பாபா ராம்தேவ், அந்த நிருபரை சுட்டிக்காட்டி "நான் ஏற்கனவே கருத்து தெரிவித்தேன். நீங்கள் மீண்டும் கேள்வி கேட்டால் என்னிடம் பதில் இல்லை. இப்படி பேச வேண்டாம். வாயை மூடு. இது உனக்கு நல்லது கிடையாது. நீங்கள் ஒழுக்கமான பெற்றோரின் மகனாக இருக்க வேண்டும்" என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 இன்று எவ்வளவு உயர்வு

இன்று எவ்வளவு உயர்வு

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 10வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்க 76 பைசா உயர்ந்து 107.45 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 பைசா அதிகரித்து ரூ.97.52க்கும் விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+