Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹத்ராஸ்.. 2 வருடங்களுக்கு பின் பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு 2 வருடமாக சிறையில் இருந்தார் சித்திக் காப்பான்.

2 வருட போராட்டத்திற்கு பின் காப்பான் ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார்.

கடந்த 2020ல் ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் பூள்கார்கி கிராமத்தில் 20 வயது பட்டியலின பெண், பிசி பிரிவு சாதி ஆண்கள் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவத்தில் உத்தர பிரதேச அரசு பாரபட்சமாக நடந்து கொண்டதாக புகார்கள் வைக்கப்பட்டன. அதோடு அந்த பெண்ணின் உடல் பெற்றோர் அனுமதி இன்றி இரவோடு இரவாக அடக்கம் செய்யப்பட்டதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது

கைது

இந்த வழக்கு குறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரளாவை சேர்ந்த சித்திக் கப்பான் என்ற செய்தியாளர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். டெல்லியில் வசித்து வந்த இவர் டெல்லியில் இருக்கும் கேரளா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். செய்தி சேகரிக்க செல்லும் வழியிலேயே இவர் கைது செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இவர் மீது தேச விரோத வழக்கு, மத வன்முறையை தூண்டும் வழக்கு என்று பல பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.

வழக்கு

வழக்கு

இவர் பிஎப்ஐ அமைப்புடன் அங்கே சென்றதாகவும், கலவரத்தை தூண்டும் வகையில் அந்த இடத்திற்கு சென்றதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. அதோடு இவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் யோகி அரசு லக்னோ உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. இதனால் தொடர்ந்து சித்திக் காப்பானின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. கேரள பத்திரிகையாளர் சங்கமும் இவருக்கு உறுதுணையாக பெரிதாக உடன் நிற்கவில்லை.

50 நாட்கள்

50 நாட்கள்

முதல் 50 நாட்கள் இவர் சிறையில் இருந்த போது அவர் தனது தனிப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க கூட அனுமதிக்க கொடுக்கப்படவில்லை. இவரின் வழக்கறிஞரை சந்திக்க விடாமல் சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தினர். அதன்பின் அதற்கு என்று தனியாக மனு கொடுத்து பின்னர் வழக்கறிஞரை சித்திக் காப்பான் சந்தித்தார். மொத்தம் இன்றோடு 704 நாட்களாக சித்திக் காப்பான் சிறையில் இருக்கிறார். கேரளாவை சேர்ந்த ஆழிமுகம் என்ற பத்திரிக்கையில் இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கை

பத்திரிக்கை

இந்த நிலையில் இன்று அவரின் பெயில் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி ரவிந்த பாட், நரசிம்மா ஆகியோர் அமர்வு விசாரணை செய்தது. இதில், எல்லோருக்கும் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திடம் பேட்டி எடுக்க இவர் சென்றார். அவர்களின் குரலை கேட்பது என்ன தவறு? அது குற்றமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி, இவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளனர்.

மோடி

மோடி

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று சித்திக் காப்பான் சதி செய்தார். அவர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார் என்று உ.பி அரசு இந்த வைத்தது. ஆனால் இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. டெல்லியில் நிர்பயா படுகொலையின் போதும்தான் மக்களும் போராடினார்கள். அவர்கள் எல்லா தீவிரவாதிகளா என்று உச்ச நீதிமன்றம் இதில் கேள்வி எழுப்பியது. இதை தொடர்ந்தே சித்திக் காப்பானுக்கு உச்ச நீதிமன்றம் பெயில் வழங்கி உள்ளது.

என்ன கட்டுப்பாடு

என்ன கட்டுப்பாடு

ஆனால் சித்திக் காப்பான் டெல்லியிலே 6 வாரங்களுக்கு இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. Jangpura காவல்நிலையத்தில் இவர் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின் இவர் கேரளா செல்லலாம். அங்கே லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இவர் கையெழுத்து போட வேண்டும். காப்பான் தனது பாஸ்போர்ட்டை கோர்டில் சமர்ப்பிக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+