எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020: மாபெரும் இறுதி போட்டியை கண்டுகளிப்பது எப்படி? முழு விபரம்
டெல்லி: எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020 (SIFF Young Artiste Festival 2020) என்பது தேசிய அளவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக நடத்தப்படும் போட்டிகள் ஆகும். இசை மற்றும் நடனம் ஆகிய துறைகளில் மொத்தம் 20 பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் மாணவர்கள் பல்வேறு பரிசுகள், விருதுகள், சான்றிதழ்கள், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகையை பெறுவார்கள். அதோடு தேசிய அளவிலான மேடையில் இந்தியாவின் முன்னணி கலைஞர்களின் வழிகாட்டுதலுக்கு கீழ் இவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.

இந்த முறை எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020 -21 போட்டியில் இந்தியாவில் இருந்து மொத்தம் 12000 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகள் முடிவில் மொத்தம் 100 பேர் இதில் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் இசை மற்றும் நடனம் ஆகிய துறைகளில் மொத்தம் 20 பிரிவுகளில் இந்த 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவரவர்களின் பிரிவில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020-21 (SIFF Young Artiste Festival 2020-21) போட்டியின் வெற்றியாளர் வரும் செப்டம்பர் 4ம் தேதி, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுவார்.
எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020-21 இறுதி சுற்றில் இசை மற்றும் நடன துறையில் பல்வேறு பிரிவுகளில் இருந்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த இறுதிச்சுற்று விழாவில் டாக்டர். எல் சுப்பிரமணியம், நிகிதா காந்தி, டெரன்ஸ் லூயிஸ், ஷால்மாலி கோல்கடே, எஹ்சான் நூரானி, ஷோவனா நாராயண் மற்றும் தி பிளாக் ஐஸ் க்ரூ இசைக்குழு ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஆதித்ய நாராயண் மூலம் தொகுத்து வழங்கப்படும்.
செப்டம்பர் 4ம் தேதி, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இறுதிப்போட்டியை பின் வரும் லிங்கில் லைவில் பார்த்திடுங்கள் https://finale.youngartiste.com/
இந்த இறுதி போட்டியில் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், வெற்றியாளர்கள் பரிசு பெறும் நிகழ்வுகளை லைவில் பார்த்திடுங்கள்.
இப்போது ரிஜிஸ்டர் செய்யுங்கள்: https://forms.gle/nk6jXDgfbhBLVcnR7
உங்கள் காலண்டரில் பதிவு செய்யுங்கள்: http://shorturl.at/mopvC
மேலும், உங்கள் காலெண்டரில் நினைவூட்டல் ஆப்ஷனை தேர்வு செய்திடுங்கள்.
எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர் (SIFF Young Artiste):
எஸ்ஐஎப்எப் (SIFF):
சிங்லால் ஐயர் குடும்ப தொண்டு நிறுவனம்தான் (Singhal Iyer family foundation) ஆகும். பெங்களூரை மையமாக வைத்து இயங்கும் இந்த தொண்டு நிறுவனம் மாணவர்களுக்கு நல்ல கல்வி வழங்குவதிலும் இந்திய இசை மற்றும் நடனத்தை வளர்ப்பதிலும் சீரிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர் படிப்புகள்:
எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர் இசை மற்றும் நடனத்தில் பல்வேறு ஆன்லைன் கோர்ஸ்களை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குகிறது. தொடக்க நிலை கோர்ஸ்கள், இடைநிலை கோர்ஸ்கள், அட்வான்ஸ் லெவல் கோர்ஸ்கள் இதில் வழங்கப்படுகிறது. பல வருட படிப்புகள் நேரடி கிளாஸ்கள், பயிற்சி வகுப்புகள், வித்தியமான பயிற்சி முறைகள், குழு பயிற்சிகள், கொலாப்ரேஷன் வாய்ப்புகள், மாஸ்டர்கிளாஸ் வகுப்புகள், சர்டிபிகேட்கள் ஆகியற்றை எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர் படிப்புகள் வழங்குகிறது.
எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020-21:
எஸ்ஐஎப்எப் இளம் கலைஞர்கள் திருவிழா 2020-21ல் முதல் கட்ட போட்டிகளில் 12 ஆயிரம் பேர் வரை 11-18 வயது பிரிவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர். இதில் அடுத்த கட்டத்திற்கு தேர்வான 100 பேருக்கு இளம் கலைஞர்களுக்கான வழிகாட்டுதல் வகுப்புகள் மூலம் (The Young Artiste Advanced Mentorship Programme - YAMP) பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு டாக்டர் எல் சுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி, மாதவி முட்கல் மற்றும் பல கலைஞர்கள் பயிற்சி அளித்தனர். ருக்மணி விஜய்குமார் (பரதநாட்டியம்), அனுபமா பகவத் (சிதார்/சரோத்), நிகிதா காந்தி (இந்திய & மேற்கு உலக பாடல்), சாகர் போரா (ஹிப்-ஹாப்) உள்ளிட்ட பலர் தங்கள் துறைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 4ம் தேதி, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இதன் இறுதிப்போட்டியை பின் வரும் லிங்கில் லைவில் பார்த்திடுங்கள் https://finale.youngartiste.com/












Click it and Unblock the Notifications