மோசடி நடந்தால்.. சிம்கார்டு யார் பெயரில் இருக்கோ அவங்க தான் முழு பொறுப்பு.. மத்திய அரசு வார்னிங்
டெல்லி: சமீப காலமாக போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு சட்ட விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. இத்தகைய குற்றச்செயல்களில் தனி நபர்களின் மொபைல் போன் எண்களை பயன்படுத்தி மோசடி நபர்கள் அதிகளவு ஈடுபடுவது தெரியவந்துள்ளது எனவும் மோசடிகள் நடந்தால் சிம்கார்டு யார் பெயரில் உள்ளதோ அவர்களே முழு பொறுப்பாவர்கள் என்று தொலைத்தொடர்புத்துறை எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் தகவல் தொலைத்தொடர்பு என்பது ரொம்பவே எளிதாகிவிட்டது. இருக்கும் இடத்தில் இருந்தபடியே உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களையும் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு வசதிகள் பெருகிவிட்ட இந்த சூழலில், இதனை வைத்து புதுப்புது மோசடிகளும் அரங்கேறுகின்றன.

போலி சிம் கார்டு
குறிப்பாக செல்போன்களில் போலியாக ஆவணங்களை கொடுத்து சிம் கார்டு வாங்கி அதனை சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் ஆதார் எண் உள்ளிட்ட ஐடி விவரங்களை பயன்படுத்தி எத்தனை சிம்கார்டுகள் உள்ளன. அவற்றில் எத்தனை நாம் பயன்படுத்தவில்லை என்பது கண்டறிந்து, பயன்படுத்தாத எண்களை முடக்க வேண்டும் என்று அவ்வப்போது தொலைத்தொடர்புத்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்தநிலையில்தான், மத்திய தொலைத்தொடர்புத்துறை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிக முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. தொலைத்தொடர்புத்துறை தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
யார் பெயரில் இருக்கிறதோ
ஆன்லைன் மோசடி உள்பட சட்ட விரோத செயல்களுக்கு ஒரு செல்போன் எண் பயன்படுத்தப்பட்டால், அந்த எண்ணுக்கு உரிய சிம்கார்டு யார் பெயரில் இருக்கிறதோ அவர்களே குற்றவாளியாக கருதப்படக்கூடும். செல்போன் சந்தாதாரர்கள் இத்தகைய விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருப்பது அவசியம். மற்றவர்களுக்கு தங்கள் சிம்கார்டை அளிப்பதை தவிர்ப்பது அவசியம். அதேபோல, செல்போன்களில் உள்ள ஐஎம்இஐ எண்களை மாற்றுதல், திருத்துதல், சிதைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதை தொலைத்தொடர்பு விதிகள் தடை செய்கிறது. ஐஎம்.இ.ஐ எண்கள் மாற்றப்பட்ட செல்போன்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
3 ஆண்டுகள் ஜெயில்
தொலைத்தொடர்பு சட்ட விதிகளை மீறும்பட்சத்தில் மூன்று ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையோ அல்லது 50 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும். அல்ல்லது இந்த இரண்டும் சேர்த்தே விதிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரில் எத்தனை சிம்கள் உள்ளன? என்பதை சஞ்சார் சாதி என்ற இணையதளம் மற்றும் ஆப் வழியாக பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
எச்சரிக்கையாக இருங்கள்
அதேபோல, செல்போனின் வர்த்தக பெயர், ஐஎம்இஐ எண்கள் பற்றிய விவரங்கள், செல்போன் மாடல், எந்த கம்பெனி போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல, உதிரிபாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மோடம் போன்ற சாதனங்களையும் வாங்கக் கூடாது.
போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் செய்து சிம் கார்டு வாங்கக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காலிங் லைன் அடையாளத்தை மாற்றும் செயலிகளையோ, இணையதளங்களையோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications