சிங்கப்பூர் பிரதமர் கழிவு நீரை குடித்தது நினைவு இருக்கா? பஞ்சாப் சிஎம் மன்னுக்கு கிளாஸ் எடுத்த அசோக்
டெல்லி: பஞ்சாபின் புனித நதியான காலி பெயின் நதியிலிருந்து நீரை குடித்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வயிற்று வலிக்கு காரணம் என்ன என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் மேலெழுந்துள்ளன. ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழக பேராசிரியர் அசோக் ஸ்வைன் இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் இட்ட பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

என்ன நடந்தது?
பஞ்சாப் மாநிலத்தின் சுல்தான்புர் லோதியில் ஓடும் காலி பெயின் நதி சீக்கியர்களின் புனித நதியாக கருதப்படுகிறது. கிபி- 15-16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீக்கிய மத குருக்களின் முதன்மையானவரான குருநானக் இந்த நதியில் நீராடியதாகவும், நதிக்கரையில் தங்கி இருந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த நதி தற்போது மாசடைந்துள்ளது. இதனை தூய்மைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 22வது ஆண்டாக நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆம் ஆத்மி
இந்த நிகழ்வில் பங்கேற்ற அம்மாநில ஆம் ஆத்மி கட்சி முதலமைச்சர் பகவந்த் மான், நதியில் பயணித்து அதிலிருந்து ஒரு டம்ளர் நீரை எடுத்து பருகியுள்ளார். நிகழ்ச்சியும் நல்லபடியாக முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற பகவந்த் மானுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசுத்தமடைந்த காலி பெயின் நதி நீரை அவர் பருகியதால்தான் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக பலர் விமர்சித்தனர்.

மலேசியா
ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு எந்த காரணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழக பேராசிரியர் அசோக் ஸ்வைன் இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் இட்ட பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அவர் டிவிட்டரில் பதிவிட்டதாவது, "கடந்த 2002ல் அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங் பொதுவெளியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை குடித்து மக்களுக்கு நம்பிக்கையளித்தார்.
Recommended Video

சிங்கப்பூர்
அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் அவர் விவரித்தார். சிங்கப்பூர் அப்போது மலேசியாவுடன் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வதில் சண்டையிட்டுக்கொண்டிருந்தது. நான் சிங்கப்பூருக்கு ஆலோசனை சொன்னேன். சிங்கப்பூர் அறிவியல் பாதையில் சென்றது. ஆனால் பஞ்சாப் முதலமைச்சர் நம்பிக்கையின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்" என பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே பஞ்சாப் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில் தற்போது அசோக் ஸ்வைனின் டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications