இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 705 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உலக அளவில் இந்தியாவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48, 661 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 705 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 13,85,522 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,85,577 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,67,882., இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 32,063.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 3,66,368 பேரும் தமிழகத்தில் 2,06,737 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,29,531 பேரும் கர்நாடகாவில் 90,942 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
-
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications