காஷ்மீர் எல்லையில் நிலைமை சரியில்லை.. எப்போது வேண்டுமானாலும் பாக். தாக்கும்.. ராணுவ தளபதி வார்னிங்!
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம், இந்தியா அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம், இந்தியா அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சனை மற்றும் குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக உலக நாடுகள் இந்தியாவை தீவிரமாக கவனிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் இந்தியாவை தீவிரமாக கவனித்து வருகிறது.
இந்தியாவில் நடந்து வரும் மாற்றங்களை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் இந்தியா இடையிலான உறவு மேலும் மோசம் அடைய தொடங்கி இருக்கிறது.

பேட்டி அளித்தார்
இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் ராணுவ தளபதி பிபின் ராவத் இதுகுறித்து தெரிவித்ததாவது, காஷ்மீர் எல்லையில் தற்போது நிலைமை சரி இல்லை. அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலைமை மொத்தமாக மோசம் அடையும். நாங்கள் முழு வீச்சான தாக்குதலுக்கு தயாராக இருக்கிறோம்.

போர் எப்படி
இதற்காக அனைத்து விதமான போர் கருவிகளையும் தயாராக வைத்து இருக்கிறோம். முழு திட்டங்களை வகுத்து தயார் நிலையில் வைத்து இருக்கிறோம். பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு படை காஷ்மீர் எல்லையில் அத்து மீறி வருகிறது.

பாகிஸ்தான்
கடந்த சில தினங்களாக அங்கு பாகிஸ்தான் சிறிய சிறிய தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா உடனடியாக பதில் தாக்குதல் நடத்தி சிறப்பான பதிலடி கொடுத்து வருகிறது. 3 நாட்களுக்கு ஒருமுறை இப்படி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா பாகிஸ்தான்
கடந்த வருடம் முழுக்க இந்தியா பாகிஸ்தான் இடையே இப்படி நிறைய பிரச்சனை வந்தது. இந்த வருட தொடக்கத்தில் எல்லையில் முழு போர் நடக்க வேண்டிய சூழ்நிலை கூட உருவானது. கடைசியில் அந்த போர் சூழல் தடுத்து நிறுத்தப்பட்டது என்று, பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications