டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா லாக்டவுன் . பொறுமை இழந்த இடம்பெயர் தொழிலாளர்கள்தான் நடைபயணமாக சென்றனர்.. சொல்வது அமித்ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் பொறுமையை இழந்த இடம்பெயர் தொழிலாளர்கள்தான் நடைபயணமாக சொந்த மாநிலங்களுக்கு சென்றனர்; அவர்கள் மீட்கப்பட்டு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

பீகாரில் பாஜகவினிரிடையே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அமித்ஷா பேசியதாவது:

சென்னை மக்களின் உயிரோடு விளையாடாதீர்... கொரோனா பரவல் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? -ஸ்டாலின்சென்னை மக்களின் உயிரோடு விளையாடாதீர்... கொரோனா பரவல் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? -ஸ்டாலின்

அன்று நிலவரம்

அன்று நிலவரம்

கொரோனாவுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து போராடும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இதனை தேர்தல் பிரசாரமாக இதை கருதவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் கொரோனாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டமாகவே இதை பார்க்கிறோம். முன்பு எல்லாம் எல்லையில் யார் வேண்டுமானும் நுழைந்து ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்கலாம் என்கிற நிலைமை இருந்தது.

சர்ஜிகல், வான்வழி தாக்குதல்

சர்ஜிகல், வான்வழி தாக்குதல்

அப்போது, ராணுவ வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட போதும் டெல்லி சர்கார் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த காலம் இருந்தது. மோடி ஆட்சியிலும் கூட ஜம்மு காஷ்மீரின் ஊரியிலும் புல்வாமாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த பயங்கரவாதிகளுக்கு பதிலடியாக சர்ஜிகல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல் என நடத்தி வருகிறோம். எல்லைகளைப் பாதுகாப்பதில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல்.

அமெரிக்கா, இஸ்ரேல் போல

அமெரிக்கா, இஸ்ரேல் போல

இப்போது அமெரிக்கா, இஸ்ரேல் வரிசையில் இந்தியாவும் எல்லை பாதுகாப்புக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்வதை உலகம் பார்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையை சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரித்திருக்கிறது. கொரோனா லாக்டவுன் காலத்தில் மே 1 முதல் இடம்பெயர் தொழிலாளர்கள் 1.25 கோடி பேர் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Recommended Video

    கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள்‌ படை - கமல்ஹாசன்
    பொறுமை இழந்த தொழிலாளர்கள்

    பொறுமை இழந்த தொழிலாளர்கள்

    இடம்பெயர் தொழிலாளர்களில் பலர் பொறுமை இழந்து நடக்க தொடங்கினர். பொறுமை இழந்து நடக்க தொடங்கியவர்களை பேருந்துகள் மூலம் மீட்டு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். இடம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு செலுத்தியது- 15%தான் மாநில அரசுகள் கொடுத்தன. பீகார் சட்டசபை தேர்தலில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். தற்போதைய சூழ்நிலையில் அரசியல் பேசுவது சரியானது அல்ல. ஆகையால் மோடியின் தலைமையில் கொரோனாவை எதிர்த்து அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    English summary
    Union Home Minsiter Amit Shah said that Some people lost patience and started walking, when it came to notice, buses were deployed to bring them to railway stations during coronalockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X