"மிஷன் 2024!" பிகே முன்வைத்த மாஸ்டர் பிளான்..சோனியா காந்தி சீக்ரெட் மீட்டிங்! அடுத்த திட்டம் என்ன
டெல்லி: காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல்வேறு தோல்விகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியைச் சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி எந்தவொரு தேர்தலிலும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக 5 மாநில தேர்தலில் ஆட்சியில் இருந்த பஞ்சாபிலும் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளே தலைமை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மறுசீரமைப்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் தான் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் சோனியா காந்தியைச் சந்தித்து 2024 பொதுத் தேர்தலுக்கான திட்டம் குறித்து விவரித்து இருந்தார். அப்போது சில மூத்த தலைவர்களும் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியிலும் இணையலாம் என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாகக் கட்சித் தலைமை விரைவில் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம் என்ன
காங்கிரஸ் தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் முன்மொழிந்துள்ள திட்டத்தில் காங்கிரஸ் 370 இடங்களில் போட்டியிடலாம் மற்றும் குறிப்பிட்ட மாநிலங்களில் நட்புக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நட்பு கட்சிகள் உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் பரிந்துரைத்துள்ளார்.

தீவிர ஆலோசனை
இதற்கு ராகுல் காந்தியும் கூட ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 2ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தயக்கம்
பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸின் நேரடி போட்டியாளராகக் கருதப்படும் பல மாநில கட்சிகளுடன் பிரசாந்த் கிஷோர் நல்லுறவைக் கொண்டு இருப்பதால், அவரது முன்மொழிவுக்குக் காங்கிரஸ் கட்சியில் ஆதரவு எழுந்த அளவுக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. கடந்த ஆண்டே பிகே காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று தகவல் வெளியானது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

காங். முடிவு என்ன
இதையடுத்து அவர் பொதுவெளியிலேயே கூட காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். கடந்த ஆண்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத போதிலும், கட்சியின் தலைமை உடன் பிகே தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முறை கட்சியின் மறுமலர்ச்சிக்கான பெரிய திட்டத்துடன், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அணுகியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பிற்கும் உடையே ஒப்பந்தம் ஏற்பட்டால், அது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பூஸ்ட் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications