Sonia Gandhi: இந்திய குடியுரிமை பெறாமலேயே சோனியா காந்திக்கு ஓட்டுரிமை - ஆதாரம் இதுதான் என பகீர் கிளப்பும் பாஜக
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே 2 முறை ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. அதோடு ஆதாரம் இதுதான் என்று எக்ஸ் பக்கத்தல் பாஜக ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாஜக வெல்லும் வகையில் வாக்காளர்களில் பெயர்கள் நீக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமின்றி கடந்த லோக்சபா தேர்தல், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல், ஹரியானா சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியலை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்தனர். ஒரே முகவரியில் ஏராளமானவர்கள் ஓட்டு உரிமை பெற்றிருப்பதையும், பலருக்கு இரட்டை வாக்குரிமை பெற்றிருப்பதையும் சுட்டிக்காண்பித்தார்.
அதுமட்டுமின்றி பாஜகவை தேர்தலில் வெற்றி பெற வைக்கும் முனைப்பில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக கூறினார். இதனை பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து தேர்தல் அதிகாரி சார்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாஜக தற்போது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பாஜக குற்றச்சாட்டு
அதாவது காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே நம் நாட்டில் வாக்குரிமை பெற்றுள்ளதாக பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் ஆதாரம் எனக்கூறி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அமித் மாளவியா வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்ப்பு தேர்தல் சட்ட மீறல்களால் நிறைந்துள்ளது. தகுதியற்ற மற்றும் சட்டவிரோத வாக்காளர்களை முறைப்படுத்துவதில் ராகுல் காந்திக்கு இருக்கும் ஆர்வத்தையும், சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) அவர் எதிர்ப்பு தெரிவிப்பதையும் விளக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
சோனியா காந்திக்கு வாக்குரிமை
1980ம் ஆண்டு சோனியா காந்தியின் பெயர் இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இத்தாலி குடியுரிமை பெற்றிருந்த அவர் இந்திய குடியுரிமையை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துள்ளார். அந்த நேரத்தில் குடும்பத்தினர் பிரதமர் இந்திரா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லமான 1, சஃப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தனர்.
அந்த முகவரியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோரின் பெயர்கள் தான் வாக்காளர் பட்டியில் இருந்தது. 1980ம் ஆண்டில், டெல்லி நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியல் 1980 ஜனவரி 1ம்தேதியை தகுதியேற்பு நாாளாக கொண்டு திருத்தப்பட்டது. அப்போது வாக்குச் சாவடி 145 இல் சீரியல் நம்பர்388 இல் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது.
நீக்கிவிட்டு மீண்டும் சேர்ப்பு
இந்தப் பதிவு சட்டத்தை தெளிவாக மீறுகிறது. இந்திய குடிமகனாக இருக்க வேண்டிய ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு அப்படி நடக்கவில்லை. அதன்பிறகு 1982ம் ஆண்டு எழுந்த போராட்டத்தைத் தொடர்ந்து அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
பிறகு 1983 ல் மட்டுமே மீண்டும் சேர்க்கப்பட்டது. புதிய திருத்தத்தில், சோனியா காந்தியின் பெயர் வாக்குச் சாவடி 140ல் வரிசை எண் 236ல் இருந்தது. அப்போதும் அவர் இந்திய குடியுரிமை பெறவில்லை. ஏனென்றால் வாக்காளர் பட்டியலில் திருத்தம் 1983 ஜனவரி 1 ம் தேதியை அடிப்படைய வைத்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சோனியா காந்திக்கு 1983 ஏப்ரல் 30ம் தேதி தான் குடியுரிமை வழங்கப்பட்டது.
Sonia Gandhi’s tryst with India’s voters’ list is riddled with glaring violations of electoral law. This perhaps explains Rahul Gandhi’s fondness for regularising ineligible and illegal voters, and his opposition to the Special Intensive Revision (SIR).
— Amit Malviya (@amitmalviya) August 13, 2025
Her name first appeared… pic.twitter.com/upl1LM8Xhl
3 ஆண்டுகளில் 2 முறை
புரியும்படி கூற வேண்டும் என்றால் அடிப்படையான குடியுரிமை பெறாமல் சோனியா காந்தியின் பெயர் 2 முறை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் 1980ல் இத்தாலி குடிமகளாகவும், அதன்பிறகு 1983ல் சட்டப்பூர்வமாக இந்திய குடியுரிமை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் இது நடந்துள்ளது. இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையா?'' என குற்றம்சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications