டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங். இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்யவில்லை- ரந்தீப்சிங் சுர்ஜிவாலா

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்திருப்பதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    இந்திரா காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வரட்டும் - பிரியங்கா காந்தி

    2019 லோக்சபா தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

    Sonia Gandhi steps down as interim president of Congress party?

    இருப்பினும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது காங்கிரஸில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த கட்சியின் இமேஜையும் தொடர்ந்து பாதித்து வந்தது. இதனிடையே காங்கிரஸில் சீனியர்களுக்கும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்களான ஜூனியர்களுக்கும் இடையே மோதல் போக்கு உக்கிரமடைந்தது.

    அண்மையில் 20க்கும் மேற்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர், கட்சி உட்கட்டமைப்பில் முழுமையான மாற்றம் தேவை எனவும் வலியுறுத்தி இருந்தனர். இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    சோனியா vs சீனியர்கள்.. அவசர அவசரமாக காரிய கமிட்டி கூட்டம்.. காங்கிரஸில் நாளை நடக்க போகும் அதிரடி!சோனியா vs சீனியர்கள்.. அவசர அவசரமாக காரிய கமிட்டி கூட்டம்.. காங்கிரஸில் நாளை நடக்க போகும் அதிரடி!

    காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சோனியாவிற்கு பறந்த கடிதம்.. 23 மூத்த தலைவர்கள் கோரிக்கைகாங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சோனியாவிற்கு பறந்த கடிதம்.. 23 மூத்த தலைவர்கள் கோரிக்கை

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வகையில், இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் நாளைய செயற்குழு கூட்டம் சோனியாவின் ராஜினாமாவை ஏற்கும் எனவும் கூறப்பட்டது.

    ஆனால் சோனியா காந்தி ராஜினாமா செய்ததாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை- அது பொய்யான செய்தி என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

    English summary
    Sources said that Sonia Gandhi stepped down as interim president of Congress party. But Congress leaders denied that Sonia stepping down as interim president.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X