கருப்பு பூனைப்படை பாதுகாப்பு ரத்து.. எஸ்.பி.ஜி தலைவருக்கு சோனியா நன்றி கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியகாந்தி தனது குடும்பத்துக்கு இவ்வளவு நாள் பாதுகாப்பு அளித்தததற்காக நன்றி தெரிவித்து எஸ்.பி.ஜி தலைவர் அருண் சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அண்மையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு கருப்பு பூனைப்பாதுகாப்பு படை (எல்பிஜி) பாதுகாப்பை மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு பதில் ஜிஎஸ்ட் பிளஸ் பாதுகாப்பு அளிப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பிரதமர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) உருவாக்கப்பட்டது. இந்த படை கருப்பு பூனைப்படை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1991ல் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பிரதமர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எஸ்பிஜி.க்கு வழங்கப்பட்டது.

சோனியா காந்தி

சோனியா காந்தி

அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது.

3மாதம் ஒரு முறை

3மாதம் ஒரு முறை

ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுவோருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய உள்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்வது வழக்கம்.

பாதுகாப்பு ரத்து

பாதுகாப்பு ரத்து

அந்த வகையில் அண்மையில் ஆய்வு செய்த குழு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. எஸ்பிஜிக்கு பதிலாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இசட் பிளஸ் பாதுகாப்பு

இசட் பிளஸ் பாதுகாப்பு

இந்நிலையில், மன்மோகன் சிங் போலவே, சோனியா குடும்பத்தினருக்கும் நேரடியாக எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று கூறி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இதற்கு பதில் தற்போது 3 பேருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

எஸ்.பி.ஜி படை

இந்நிலையில், தன் குடும்பத்திற்கு இதுவரை பாதுகாப்பு அளித்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, எஸ்.பி.ஜி தலைவர் அருண் சின்ஹாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், எங்களது பாதுகாப்பைக் கவனித்து, அத்தகைய அர்ப்பணிப்பு, விவேகம் மற்றும் தனிப்பட்ட கவனிப்புடன் நல்வாழ்வைக் கவனித்ததற்காக எங்கள் முழு குடும்பத்தின் சார்பாக, எஸ்பிஜிக்கு எங்களது ஆழ்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+