தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்... நல்ல செய்தி சொன்ன இந்திய வானிலை மையம்
தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை முதல் கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு பருவமழை இயல்பாகவே இருக்கும் என்றும் கணித்துள்ளது.
டெல்லி: நடப்பாண்டு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் தென் இந்தியாவில் மழைப் பொழிவு 93 சதவிகிதம் முதல் 107 சதவிகிதம் வரை என இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. வரும் வியாழக்கிழமை முதல் தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். ஜூன் முதல்நாளில் தென்மேற்குப் பருவமழை வழக்கம் போல தொடங்கி விடும்.
நடப்பாண்டு இரண்டு நாட்கள் தாமதமாக ஜூன் 3 முதல் மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று கேரளாவில் வலுவடைந்துள்ளது.
இந்தியாவில், நடப்பாண்டு பருவமழைகள் இயல்பாகவே இருக்கும். அதிகப்படியான மழைப் பொழிவை பருவமழைகள் தராது என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் மழைப் பொழிவு 92 சதவிகிதம் முதல் 108 சதவிகிதம் வரை என இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென் இந்தியாவில் மழைப் பொழிவு 93 சதவிகிதம் முதல் 107 சதவகிதம் வரை என இயல்பாக இருக்கும். அதே சமயம், மத்திய இந்தியாவில், இயல்பானதை விட 106 சதவீதம் அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 95 சதவிகிதம் என இயல்புக்குக் குறைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மானாவாரி விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் பெரும்பாலும் இயல்பை விட அதிகமான அளவு மழைப்பொழிவு இருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை மைய அதிகாரி கூறியுள்ளார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications