டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சஸ்பென்ஸ் தரும் ஸ்வீட் "16".. செம டென்ஷனில் காத்திருக்கும் காங்., பாஜக!

Google Oneindia Tamil News

Recommended Video

    ம.பி.யில் வெற்றியை தீர்மானிக்கும் அந்த 16 தொகுதிகள் ?

    டெல்லி : தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்பு விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, மத்திய பிரதேசத்தில் உள்ள 16 முக்கிய தொகுதிகளின் வெற்றி தோல்வியே, யாருக்கு ஆட்சி என்பதை நிர்ணயிக்கும் என்பதால், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் உச்சபட்ச பதைபதைப்பில் உள்ளன.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வரும் 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில தேர்தலானது, மிக முக்கிய தேர்தலாக கணிக்கப்படுகிறது.

    ‘Special 16’ in Madhya Pradesh to indicate which party to form the government

    அம்மாநிலத்தில் உள்ள 16 தொகுதிகளை கைப்பற்றுபவர்களுக்கு அரியணை என்பதே அதற்கு காரணம். கடந்த 6 முறை நடைபெற்ற தேர்தல்களில் இந்த பார்முலா மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மால்வா, நிமார் மண்டலத்தில் உள்ள சுஸ்நர், ஜாவத், பத்னாகர், மனவார், கர்காம், செந்துவா ஆகிய தொகுதிகளும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இது தவிர கிழக்கு குவாலியர், நாரியாவாலி, கோடா, டோக்ரா உள்ளிட்ட தொகுதிகளும் அதில் அடக்கம். மேற்கண்ட 16 தொகுதிகளில் இன்னுமொரு மலைக்க வைக்கும் புள்ளி விவரங்கள் ஆச்சரியப்பட வைக்கிறது. கர்கான், நேபாநகர், செந்துவா, நிவாஸ் ஆகிய தொகுதிகளில் வெல்லும் கட்சிக்கே அரியாசனம்.

    இது இன்று நேற்றல்ல... கடந்த 37 ஆண்டுகளாக மத்திய பிரதேச அரசியலில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தான் வெற்றிக்கு காரணமாக விளங்க போகும் அந்த 16 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரசும் வளைத்து, வளைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

    அவை தவிர, மன்வார், சாசர், நாரியாவாலி ஆகிய தொகுதிகளின் வெற்றி, 8 முறை நடைபெற்ற தேர்தல்களில் ஆட்சியை நிர்ணயம் செய்கிறது. மேலும், 6 தொகுதிகள் 29 ஆண்டுகளாக, 7 தேர்தல்களில் ஆளும்கட்சியின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    After the exit poll results over, Congress and the ruling Bharatiya Janata Party are keeping their eyes set on 16 important seats. These 16 seats are playing major role in the formation of the government in Madhya Pradesh. Congress and the ruling BJP are keeping their eyes on 16 important seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X