டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடு வானில் திடீரென குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்! மிரண்டு போன பயணிகள்.. 14 பேர் படுகாயம்! என்னாச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று நடுவானில் டர்புலன்ஸில் சிக்கியதில் 14 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாகவே விமானம் வானில் செல்லும் போது, சில சமயங்களில் அது டர்புலன்ஸில் சிக்குவது வழக்கமான ஒன்று தான். ஆனால், பெரும்பாலான சமயங்களில் இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

இதனிடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் டர்புலன்ஸில் சிக்கியதில் 14 பேருக்கு காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

எது வடை 350 ரூபாயா! பச்சை தண்ணீர் 100 ரூபாயாம்.. தோசை விலை கேட்டால் ஆடி போவீங்க! இது இலங்கை நிலை எது வடை 350 ரூபாயா! பச்சை தண்ணீர் 100 ரூபாயாம்.. தோசை விலை கேட்டால் ஆடி போவீங்க! இது இலங்கை நிலை

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் பி737 விமானம் சென்று கொண்டிருந்தது. துர்காபூர் ஏர்போட்டில் அந்த விமானம் தரையிறங்கச் சற்று நேரத்திற்கு முன்னர், அந்த விமானம் டர்புலன்ஸில் சிக்கிக் குலுங்கத் தொடங்கியது. வழக்கம் போலச் சிறிது நேரத்தில் இது நின்றுவிடும் என்றே பயணிகள் கருதினர். இருப்பினும், இந்த டர்புலன்ஸ் நீண்ட நேரம் நீடித்தது.

குலுங்கிய விமானம்

குலுங்கிய விமானம்

நடு வானில் விமானம் தொடர்ச்சியாகக் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சியில் கத்தத் தொடங்கினர். சீட் பெல்ட்டுகள் அணிந்தும் கூட, விமானம் குலுங்கிய வேகத்தில் பயணிகள் அங்கும் இங்கும் மோதியனர். இதில் சுமார் 12 பயணிகள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக விமானம் பத்திரமாக தூர்காபூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது.

விடுவிப்பு

விடுவிப்பு

இதையடுத்து மும்பை-துர்காபூர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பணியாளர்களும் விமானமும் கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விமான பணியாளர்கள் பணி ரோஸ்டரில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். விமானப் பணியாளர்கள் பணி ரோஸ்டரில் இருந்து விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி, விமானப் பராமரிப்புப் பொறியாளர் (AME) மற்றும் ஸ்பைஸ்ஜெட்டின் பராமரிப்புக் கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை

விசாரணை

டர்புலன்ஸில் சிக்கிய விமானத்தை ஆய்வு செய்யும் பணிகளிலும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இறங்கி உள்ளது. அனைத்து ஸ்பைஸ் ஜெட் விமானங்களும் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விமானத்திலும் சில இருக்கைகள் தேசம் அடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு சிவில் ஏவியேஷன் துறை உத்தரவிட்டுள்ளது. வரும் நாட்களில் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Several passengers were injured after SpiceJet flight from Mumbai to Durgapur experienced major mid-air turbulence: (டர்புலன்ஸில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்) SpiceJet flight mid-air turbulence latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X