திருடர்கள் பலவிதம்.. ஒவ்வொருவரும் ஒருவிதம்.. டெல்லியில் ‘ஸ்பைடர்மேன்’ திருடன் கைது!
மாடிகளில் மட்டுமே திருடும் ஸ்பைடர் மேன் திருடனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் மட்டுமே திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த வினோதமான திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருடர்களுக்குள்ளும் பல வினோதமானவர்கள் பற்றி நாம் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்போம். பெண்களின் உள்ளாடைகளை திருடுவது, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களைத் திருடுவது, பணக்காரர்களாக இருந்தபோதும் சிறிய பொருட்களை மட்டும் திருடுபவர்கள் என வினோத திருடர்கள் பலவகை.
அந்தவகையில் மாடிகளில் மட்டுமே திருடுவதை வழக்கமாகக் கொண்ட திருடனைப் போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் டெல்லி திலக் நகர் பகுதியைச் சேர்ந்த ரவி (23).

வினோத திருடன்:
தரைத்தள வீடுகளில் திருடுவது ரவிக்கு பிடிக்காதாம். இதனால் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் உள்ள வீடுகளில் மட்டுமே தொடர்ந்து திருடி வந்துள்ளான். வெளிப்புறச் சுவர் வழியாக மாடிக்கு ஏறி, வீடுகளின் திறந்த வராண்டா அல்லது பால்கனிகளை பயன்படுத்தி வீடுகளின் உள்ளே நுழைவதை ரவி வழக்கமாக செய்து வந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை:
இது தொடர்பாக டெல்லி டிஜிபி மோனிகா பரத்வாஜ் கூறுகையில், ‘நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட காவல்நிலையங்களுக்கு நாங்கள் விரைந்தோம். அங்கு இருந்த குற்றவாளிகள் பட்டியலையும், புகார்கள் குறித்த தகவல்களையும் விசாரித்தோம். இதில் அனைத்து இடங்களிலும் ஒரே பாணியில் திருடப்பட்டது தெரிய வந்தது.

சிசிடிவி காட்சிகள்:
இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் திருடனை தேடி வந்தோம். அப்போது இந்தத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது ரவி என்பது தெரியவந்தது. சுபாஷ் நகரில் உள்ள பசிபிக் மாலில் வைத்து ரவியைக் கைது செய்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்பைடர்மேன் திருடன்:
வீட்டின் பால்கனியில் ஏறி அறைக்குள் செல்ல வடிகால் குழாய்களை பயன்படுத்தி வந்துள்ளான் ரவி. இதனால் அவனை ‘ஸ்பைடர்மேன் திருடன்' என போலீசார் அழைக்கின்றனர். ரவிக்கு ஏன் இப்படி ஒரு வினோதப் பழக்கம் என்பது குறித்து தெரியவில்லை.

6 வழக்குகள்:
கீர்த்தி நகரில் பதிவு செய்யப்பட்ட 7 திருட்டு வழக்குகளில், 6 வழக்குகளில் ரவி சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications