சீதா ஹனுமாருக்கு அளித்த மந்திரத்தை ராணுவ தளபதிக்கு கொடுத்தேன்.. சாமியார் ராம்பத்ராச்சார்யா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கையை கைப்பற்ற ஹனுமாருக்கு கடவுள் சீதா என்ன மந்திரத்தை கொடுத்தாரோ அதே மந்திரத்தை நான் ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு தீட்சையாக கொடுத்தேன் என்று பிரபல சாமியார் ராம்பத்ராச்சராயா கூறியுள்ளார். மேலும், ராணுவ தளபதியிடம் தட்சணையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை நான் கேட்டுள்ளேன் என்றும் பிரபல சாமியார் ராம்பத்ராச்சராயா கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி தன்னிடம் இருந்து ராமர் மந்திரத்தை பெற்று சென்றதாகவும், கடவுள் ஹனுமாருக்கு சீதா என்ன மந்திரத்தை வழங்கினாரோ அந்த மந்திரத்தை தான் ராணுவ தளபதிக்கு சொல்லிக் கொடுத்தேன். ஹனுமார் இந்த மந்திரத்தை வைத்தே இலங்கையை கைப்பற்றினார். ராணுவ தளபதியிடம் தட்சணையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை நான் கேட்டுள்ளேன் என்று பிரபல சாமியார் ராம்பத்ராச்சராயா கூறியுள்ளார்.

spiritual-leader-claims-to-have-given-divine-mantra-to-army-chief-for-kashmir

ஹனுமனுக்கு சீதா கொடுத்த மந்திரம்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜகத்குரு கூறியதாவது:- ராணுவ தளபதியை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். பாகிஸ்தான் இனி எதாவது பயங்கரவாத தாக்குதலை நடத்தினால் அந்த நாடு அழிக்கப்படும். இலங்கையை கைப்பற்ற ஹனுமாருக்கு கடவுள் சீதா என்ன மந்திரத்தை கொடுத்தாரோ அதே மந்திரத்தை நான் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதிக்கு தீட்சையாக கொடுத்தேன் என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையில் தீர்க்கத்துடன் இந்திய ராணுவம் செயல்பட்டு நமது தேசத்தை காத்தது. இத்தகைய சூழலில்தான், சாமியார் ஜகத்குரு மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார். ராணுவ தளபதி அண்மையில், சக்த்குரு சேவா சங்க் அறக்கட்டளையால் கட்டப்பட்ட சத்குரு கண் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி சென்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி, ராம்பத்சர்யாவின் ஆன்மீக பங்களிப்பு அளப்பறியது என்று பாராட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள முக்கிய பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் எல்லையொர கிராமங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானிடம் இருந்து வந்த ஏவுகணைகள், டிரோன்களை வானிலேயே அழித்தது. அதேபோல, பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் மீதும் இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது.

இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமான தளங்களில் சேதம் ஏற்பட்டது. இந்தியாவின் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான், பேச்சுவார்த்தைக்கு வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் டிஜிஎம்.ஓ கேட்டுக்கொண்டதன் படி இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+