Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய்சங்கருடன், இலங்கை வெளியுறவு அமைச்சர் சந்திப்பு! டோர்னியர் விமான கொள்முதல் பற்றி பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு அமைச்சர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் கூறினார். மேலும் இந்தியாவிடமிருந்து 2 டோர்னியர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டம் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இலங்கை

பொருளாதார நெருக்கடியில் இலங்கை

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்தியா பொருளாதார உதவிகள் செய்து வருகிறது. மேலும் அந்த நாட்டில் தொழில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் இருநாட்டு உறவும் இன்னும் மேம்பட வாய்ப்புள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

இந்நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் டெல்லியில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். இலங்கைக்கான டோர்னியர் விமான கொள்முதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபற்றி ஜி.எல்.பிரிஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியதாவது: இலங்கைக்கு 2 டோரினர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான திட்டம் குறித்து பேசினேன். இதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. மேலும் போர் முடிந்த நிலையில் 2015 உறுதிமொழியில் இருந்து இலங்கை மீறுவதாக குற்றம்சாட்டப்படுவது பற்றியும், வரும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டம் தொடர்பாகவும் விவாதித்தோம்.

கூட்டுக்குழு

கூட்டுக்குழு

இந்தியா-இலங்கை இடையே நல்ல உறவு உள்ளது. பணபரிவர்த்தனை செய்யும் அளவில் உயர்த்த முயற்சிக்கிறோம். துறைமுகம், சுற்றுலா, மருந்து துறைகளில் இந்திய பொருளாதாரத்தை இணைப்பது முக்கிய நோக்கமாக உள்ளது. மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 2 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், 2 மீன்வளத்துறை அமைச்சர்களை ஒருங்கிணைத்து கூட்டுக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மத்தியில் இலங்கை வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இதுபற்றி பேசி இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்'' என்றார்.

திருத்தம் குறித்து பேசவில்லை

திருத்தம் குறித்து பேசவில்லை

மேலும், 1987 ம் ஆண்டில் இந்தியா தலையீட்டின் அடிப்படையில் இருந்த அதிகார பங்கீட்டை அமல்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதுபற்றிய கேள்விக்கு, ‛‛ அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பாக எதுவும் பேசவில்லை'' என்றார்.

டோர்னியர் விமானத்தின் சிறப்பு

டோர்னியர் விமானத்தின் சிறப்பு

டோர்னியர் விமானம் முதன்முதலில் டோர்னியர் ஜிஎம்பிஎச் எனும் நிறுவனம் ஜெர்மனியில் தயாரித்தது. இந்நிறுவனம் 1981 முதல் 1998 வரை 245 விமானங்கள் தயாரித்தது. இதற்கிடையே தான் 1983ல் எச்.ஏ.எல்., நிறுவனம் டோர்னியார் விமானம் உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸ் பெற்று உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 125 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. 2017 நிலவரப்படி 63 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இலகுரக விமான வகையை சேர்ந்த இந்த டோர்னியர் பல தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதை ஏர் ஆம்புலன்ஸாகவும், வி.ஐ.பி., பயணத்துக்கும் பயன்படுத்தலாம். மேலும் வான்வெளி ஆய்வு, பாரா ஜம்பிங் உள்ளிட்டவைகளுக்கும், ராணுவ, கடற்படை வீரர்களின் பயிற்சிக்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக கடல்சார்ந்த கண்காணிப்புக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் இலங்கை அரசு இந்தியாவிடம் இருந்து 2 டோர்னியர் விமானங்கள் கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+